For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கே.எல்.ராகுல் எடுத்த பெரும் ரிஸ்க்.. வங்கதேச டெஸ்டில் இந்தியாவுக்கு வந்த கண்டம்.. இதை யோசிக்கலையேங்க

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பெரிய ரிஸ்க் எடுத்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்கள் இழப்புக்கு 404 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய வங்கதேசம் 150 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை பெற்ற 2வது இன்னிங்ஸை 254 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கியது. எதிர்பார்த்தைதை போன்றே இந்திய அணிக்கு 2வது இன்னிங்ஸும் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. ஓப்பனிங் வீரரும் கேப்டனுமான கே.எல்.ராகுல் 23 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா ஜோடி நங்கூரம் போன்ற இன்னிங்ஸை கொடுத்தனர்.

2வது இன்னிங்ஸ் ஆட்டம்

2வது இன்னிங்ஸ் ஆட்டம்

சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ரன்களை விளாசினார். மறுமுணையில் இருந்த சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவும் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு சதமடித்த புஜாரா 1443 நாட்கள் காத்திருப்புக்கு பின் தற்போது சதமடித்துள்ளார். இதனால் இந்திய அணி 258 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து நல்ல நிலையில் இருந்தது. மொத்தமாக 513 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. அப்போது திடீரென கேப்டன் கே.எல்.ராகுல் டிக்ளெர் செய்தார்.

ரிஸ்க் எடுத்த கே.எல்.ராகுல்

ரிஸ்க் எடுத்த கே.எல்.ராகுல்

இந்நிலையில் இந்த முடிவுதான் ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்த சூழலில், 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறி வருகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் அதிவேகமாகவே ரன்களை அடிக்க முடியும். சட்டீஸ்வர் புஜாராவே 130 பந்துகளில் 102 ரன்களை அடித்துவிட்டார் என்பது தான் இதற்கு உதாரணம். அவரின் அதிவேக சதம் இதுவாகும். சுப்மன் கில்லும் 152 பந்துகளில் 110 ரன்களை அடித்திருந்தார்.

நீண்ட அவகாசம்

நீண்ட அவகாசம்

இப்படிபட்ட களத்தில் வங்கதேச அணி 513 ரன்களை விரட்ட இன்றைய நாளில் ஒரு செஷன் முழுவதுமாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் முழுவதுமாக இருக்கிறது. எனவே பேட்டிங்கிற்கு சாதகமான களத்தில் இரண்டரை நாட்கள் அவகாசத்தை பயன்படுத்தி வங்கதேசம் இந்த இலக்கை விரட்ட அதிக வாய்ப்புள்ளது. பின் வரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் ஆகியோர் இருந்த போதும், இந்த முடிவை எடுத்தது ரிஸ்க்காகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 16, 2022, 16:38 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
Team India captain KL Rahul tookes a huge risk in the India vs bangladesh 1st Test match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X