For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி குறைந்த ரன்களில் அவுட்.. சச்சினை முந்திய ரோஹித் சர்மா.. கேப்டன் vs துணை கேப்டன்

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 377 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்த போட்டியில், கோலி சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். மறுபுறம், ரோஹித் சர்மா ருத்ர தாண்டவம் ஆடி பவுண்டரி மழை பொழிந்து 162 ரன்கள் குவித்தார்.

கோலி ஒரு முக்கிய சாதனையை தவற விட்ட நிலையில், ரோஹித் சச்சினை முந்தி புதிய சாதனை மைல்கல்களை எட்டியுள்ளார்.

4 சதங்கள் சாதனை

4 சதங்கள் சாதனை

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்தியாவில் கோலி மட்டுமே அந்த சாதனைப் பட்டியலில் இருக்கிறார். நான்காவது ஒருநாள் போட்டியிலும் கோலி சதம் அடித்தால், சங்ககாராவின் தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் அடித்த சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

குறைந்த ரன்கள் அடித்த கோலி

குறைந்த ரன்கள் அடித்த கோலி

எனினும், கோலி வெறும் 16 ரன்களுக்கு ரோச் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், இந்த அரிய சாதனை வாய்ப்பை நழுவவிட்டார் கோலி. சாதனையை நழுவ விட்டது ஒருபுறம் என்றால், 16 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் இந்த ஆண்டில் தன் மிக குறைந்த ஒருநாள் போட்டி ரன்னை பதிவு செய்தார் கோலி. 2018இல் மட்டும் கோலி 13 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1143 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி இதுவரை எவரும் எட்டாத அளவாக, 129.88 என உள்ளது. இதில் 6 சதம், 3 அரைசதம் அடங்கும்.

ரோஹித் 150+ இல் சாதனை

ரோஹித் 150+ இல் சாதனை

கேப்டன் கோலி ஏமாற்றிய நிலையில், போட்டியை கையில் எடுத்துக் கொண்ட துணை கேப்டன் ரோஹித் சர்மா அதிரடி காட்டினார். 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் பறக்க விட்ட அவர், 137 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். ஏற்கனவே, உலகளவில் ஆறு முறை 150+ ரன்களை அடித்து சாதனை செய்து இருந்த ரோஹித், ஏழாவது முறையாக 150+ ரன்களை எட்டி தன் சாதனை மைல்கல்லை மேலும் ஒரு படி உயர்த்தி உள்ளார்.

சச்சினை முந்திய ரோஹித்

சச்சினை முந்திய ரோஹித்

அது மட்டுமின்றி 4 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினை முந்தி ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த தொடர் துவங்கும் முன் சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு பின்னே ஒன்பதாவது இடத்தில் இருந்த ரோஹித், தற்போது 198 சிக்ஸர்களுடன் எழாவது இடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். தோனி 218 சிக்ஸர்கள் அடித்து பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Tuesday, October 30, 2018, 10:10 [IST]
Other articles published on Oct 30, 2018
English summary
Kohli got out for his lowest score in 2018 while Rohit hit ton in 4th ODI against west indies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X