கோஹ்லி எப்படிப்பட்டவர் தெரியுமா.. சிலாகிக்கும் சஹல்

Posted By:

பெங்களூரு: மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி, கோஹ்லி ஒரு அருமையான லீடர் என்று யுஸ்வேந்திர சஹல் புகழாரம் சூட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் சஹல். 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஐந்து போட்டிகளிலும் இந்தியா வென்று இலங்கையை வெள்ளையடித்திருந்தது.

இந்த நிலையில் சஹல், கோஹ்லியை புகழ்ந்து பேசி சிலாகித்துள்ளார். கோஹ்லி ஒரு சிறந்த லீடர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். சஹலின் பேட்டியிலிருந்து சில துளிகள்..

பூஸ்ட் கொடுப்பார்

பூஸ்ட் கொடுப்பார்

கோஹ்லி மைதானத்திலும் சரி, வெளியிலும் சரி நல்ல லீடர். நமக்கு தார்மீக ரீதியாக ஊக்குவிப்பார், பூஸ்ட் கொடுப்பார். தட்டிக் கொடுப்பார். ஊக்கம் தருவார்.

பாசிட்டிவ் எனர்ஜி

பாசிட்டிவ் எனர்ஜி

எப்போதுமே அவரிடமிருந்து நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். திடமான நம்பிக்கையோடு எதையும் செய்வார். முடிவுகளையும் கூட திடமாகவே எடுப்பார்.

நல்லா விளையாடாவிட்டாலும்

நல்லா விளையாடாவிட்டாலும்

நீங்கள் சரியாக ரன் எடுக்காவிட்டாலும் அல்லது விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கூட உங்களை அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார். தட்டிக் கொடுத்து ஆட வைப்பார்.

முக்கியமான தொடர்

முக்கியமான தொடர்

இலங்கை தொடர் எனக்கு முக்கியமானதாக இருந்தது. காரணம், ஒரு ஆண்டு கழித்து நான் விளையாட வந்துள்ளேன். நாங்கள் தொடரை வென்றோம். நானும் 4 விக்கெட்களை வீழ்த்த முடிந்தது என்றார் சஹல்.

Read more about: cricket kohli கோஹ்லி
Story first published: Monday, September 11, 2017, 12:06 [IST]
Other articles published on Sep 11, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற