For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஓவர்!! கொட்டற மழையில் பந்து வீசணுமா? அம்பயரிடம் கோபப்பட்ட கோலி #IndvsAusT20

Recommended Video

மழையில் பந்து வீச சொன்ன நடுவர்கள், கோபப்பட்ட கோலி- வீடியோ

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா ஆடிய 2வது டி20 போட்டியில் அம்பயர் சிறிது நேரம் மழையில் போட்டியை தொடர வைத்தார்.

இது கேப்டன் கோலியை கோபப்பட வைத்தது. அவர் அம்பயரிடம் கோபமாக ஏதோ கூறிச் சென்றார்.

பின்னர் இந்த இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனினும், அம்பயர்கள் மழையில் பந்து வீசச் செய்தது சரிதானா?

இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா

இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா

முதல் டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. இதனால், அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இரண்டாவது டி20 போட்டியை சந்தித்தது.

19வது ஓவரில் மழை பெய்தது

19வது ஓவரில் மழை பெய்தது

ஆஸ்திரேலிய அணி இன்னிங்க்ஸின் 19வது ஓவரில் மழை பெய்யத் துவங்கியது. அப்போது இரண்டு பந்துகள் வீசிய நிலையில் மழை அதிகமாக பெய்தது. எனினும், அம்பயர்கள் தொடர்ந்து பந்து வீசுமாறு கூறினார்.

கோலி கோபம் அடைந்தார்

கோலி கோபம் அடைந்தார்

மூன்றாவது பந்தை வீசி முடித்த பின்னரும் அம்பயர் பந்து வீசுமாறு கூற கோலி கோபமடைந்தார். அம்பயரிடம் கோபமாக ஏதோ கூறி விட்டு சென்றார். அதன் பின் 19வது ஓவர் முடியும் வரை இந்தியா மழையில் பந்து வீசியது. அதன் பின்னரே அம்பயர்கள் போட்டியை நிறுத்தினர்.

நியாயம் தான்

நியாயம் தான்

கோலியின் கோபம் நியாயமானது தான் என வர்ணனை அறையில் இருந்த ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறினார். இது போல மழையில் பந்து வீசும் போது பீல்டிங் செய்வது மிக கடினம். பீல்டிங் செய்ய ஓடும் போது வழுக்கி விழ அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும், அதிக ஈரத்தால் பந்துவீச்சாளர் பந்தை சரியாக கட்டுப்படுத்த முடியாது.

Story first published: Friday, November 23, 2018, 18:55 [IST]
Other articles published on Nov 23, 2018
English summary
Kohli is not happy about umpires decision to play in rain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X