15 லட்சம் ரூபாய் வாடகை கட்டுபடியாகல… புதிய வீடு தேடுகிறார் கோஹ்லி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

மும்பை: மும்பையில், மாத வாடகையாக, ரூ.15 லட்சம் கொடுத்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, காதல் மனைவிக்காக புதிய வீடை தேடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, நீண்ட காலம் காதலித்த பிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்தார்.

Kohli search for house

தற்போது மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள, பிரபலங்கள் வசிக்கும், மிக பிரம்மாண்டமான அப்பார்ட்மென்டின், 40வது தளத்தில், 2,675 சதுர அடி உள்ள பிளாட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இதற்காக மாத வாடகையாக, ரூ.15 லட்சம் கொடுத்து வருகிறார்.

காதல் மனைவிக்கு பரிசளிப்பதற்காக, மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள ஓம்கார்-1973 என்ற குடியிருப்பு வளாகத்தில், ஒரு பிளாட்டை கடந்தாண்டு ஜூனில் புக் செய்திருந்தார். ரூ.34 கோடியில், 35வது தளத்தில், 7,171 சதுர அடி கொண்ட மிக பிரம்மாண்ட பிளாட்டை புக் செய்திருந்தார்.

அதை தற்போது ரத்து செய்துள்ளார் விராட் கோஹ்லி. பாந்த்ரா மற்றும் வர்சோவா இடையே, கடல் அழகை ரசிக்கக் கூடிய அளவில் உள்ள, மிகவும் பிரம்மாண்ட பென்ட்ஹவுசை அவர் தேடி வருகிறார்.

சார், பெருமூச்சு விடாதிங்க. அவங்க ரெண்டு பேரும் சம்பாதிக்கிறாங்க். அதற்கேற்ப சொகுசாக இருக்க விரும்பறாங்க.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Kohli looking for new house in Mumbai
Story first published: Saturday, March 24, 2018, 10:37 [IST]
Other articles published on Mar 24, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற