For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துட்டு சம்பாதிப்பதில் தோனியை வீழ்த்த காத்திருக்கும் கோலி.. இப்போ வருமானம் எவ்ளோ தெரியுமா?

மும்பை : உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் முதல் நூறு விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோலி இடம் பிடித்துள்ளார்.

ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கோலி 83வது இடத்தை பிடித்துள்ளார்.

கோலி தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருப்பதோடு தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆடி வருபவர்களில் உலகின் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

உயர்ந்து வரும் கோலியின் வருமானம்

உயர்ந்து வரும் கோலியின் வருமானம்

ஒரே நேரத்தில் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் இந்திய அணி கேப்டன் என்ற அந்தஸ்தில் இருப்பதால் கோலியை நோக்கி விளம்பர நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. அதனால், கோலியின் வருமானமும் உயர்ந்து வருகிறது.

83வது இடம் பிடித்த கோலி

83வது இடம் பிடித்த கோலி

பிரபல ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்ட அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கடந்த 12 மாதங்களில் 24 மில்லியன் டாலர் (தோராயமாக 169 கோடி) வருமானத்தோடு 83வது இடத்தில் இருக்கிறார் கோலி. பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிக், கால்பந்து வீரர் செர்ஜியோ அகுரோ உள்ளிட்டோரை விட கோலி அதிகம் சம்பாதிக்கும் வீரராக இருக்கிறார்.

முன்பு தோனி இருந்தார்

முன்பு தோனி இருந்தார்

இந்தியாவை பொறுத்தவரை முன்பு தோனி 2015ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 31 மில்லியன் டாலர் (தோராயமாக 219 கோடி) வரை சம்பாதித்தார். அதை இன்னும் கோலி எட்டவில்லை என்றாலும் விரைவில் தோனியை வீழ்த்தி விடுவார் என்றே கூறுகிறார்கள்.

கிரிக்கெட்டில் அதிகம்

கிரிக்கெட்டில் அதிகம்

அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிரபல குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் மெஸ்ஸி இருக்கிறார். இவர்களுக்கு இணையாக கோலி போன்ற எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் சம்பாதித்து விட முடியாது. எனினும், கோலி கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

24 மில்லியன் சம்பாதிக்கும் கோலி

24 மில்லியன் சம்பாதிக்கும் கோலி

கோலி சுமார் 20 மில்லியன் டாலர்களை (தோராயமாக 141 கோடி) விளம்பரத்தின் மூலமும், 4 மில்லயன் டாலர் (தோராயமாக 28 கோடி) வரை கிரிக்கெட் போட்டியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் பரிசுகள் மூலம் சம்பாதிப்பதாக ஃபோர்பஸ் கூறியுள்ளது.

சர்ச்சைகள் பாதிக்குமா?

சர்ச்சைகள் பாதிக்குமா?

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் "இந்திய கிரிக்கெட் வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் ஆட்டத்தை ரசிக்கலாம்" என கூறினார். அதனால் எரிச்சலடைந்த கோலி, "நீங்கள் இந்தியாவை விட்டு வெளியே போகலாம்" என கூறினார். இது தேவையற்ற சர்ச்சை ஆனது. இது போன்ற சர்ச்சைகள் கோலியின் விளம்பர வாய்ப்புகளை பாதிக்குமா?

நிச்சயம் இல்லை

நிச்சயம் இல்லை

நிச்சயம் இல்லை. இது அவரது விளம்பர வாய்ப்புகளை மேலும் உயர்த்தவே செய்யும் என்கிறார் கோலியின் விளம்பர ஏஜண்டாக இருக்கும் பேஸ்லைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் துஹின் மிஸ்ரா. கோலி இது போல உறுதியான, வெளிப்படையான நிலைப்பாடுகள் எடுப்பது அவர் ரசிகர்கள் மத்தியில் அவரது மதிப்பை உயர்த்தும் என்கிறார் இவர்.

கோலியின் விளம்பர மதிப்பு

கோலியின் விளம்பர மதிப்பு

கோலி தற்போது வெறும் கிரிக்கெட் ஆடும் கோபக்கார இளைஞன் அல்ல. இந்திய அணியின் கேப்டன். தலைமை பொறுப்பு இருக்கிறது. திருமணம் ஆனவர். குடும்பத் தலைவர் என்ற ஒரு முகமும் உள்ளது. உடற்தகுதி மீது அதிக ஆர்வம் கொண்டு, ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவை எல்லாம் சேர்த்து கோலியின் விளம்பர மதிப்பை பல மடங்கு உயர்த்தி வருவதாக கூறுகிறார் மிஸ்ரா.

இதுக்கெல்லாம் காரணம் யாரு தெரியுமா மக்களே? மாய்ஞ்சு.. மாய்ஞ்சு கிரிக்கெட் பாக்குற நாம தான்!!

Story first published: Tuesday, November 27, 2018, 16:14 [IST]
Other articles published on Nov 27, 2018
English summary
Kohli will beat Dhoni as an highest earning sportsman of India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X