இவன் என்ன இப்படி பந்து போடுறான்.. டோணி வந்துட்டான்.. தமிழ் வர்ணனையில் கலக்கும் ஸ்ரீகாந்த்!

Posted By:

சென்னை: ஐபிஎல் போட்டி எந்த அளவிற்கு வைரல் ஆகி உள்ளதோ அதே அளவிற்கு தமிழில் வர்ணனை செய்யும் கிரிஸ் ஸ்ரீகாந்த் டிரெண்ட் ஆகியுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளது. இந்த மூன்று போட்டிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.

அதே சமயம் தமிழில் வர்ணனை செய்யும் ஸ்ரீகாந்த் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளார். அவரின் வித்தியாசமான வர்ணனை மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.

யார் இருக்கிறார்கள்

யார் இருக்கிறார்கள்

தற்போது தமிழ் கமெண்ட்ரி குழுவில் ஹேமங் பதானி, கிரிஸ் ஸ்ரீகாந்த், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், விபி சந்திரசேகர், பத்ரிநாத், அபினவ் முகுந்த், கேவி சத்திய நாராயணன், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கமெண்ட்ரி செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

வைரல் ஜோடி

வைரல் ஜோடி

இதில் ஸ்ரீகாந்த், ஆர்ஜே பாலாஜி ஜோடி மிகவும் அதிக அளவில் வைரல் ஆகி உள்ளது. இவர்கள் காமெண்டரியில் அடிக்கும் லூட்டிகள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் எப்போது காமெண்டரி செய்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எல்லாமே கவித

எல்லாமே கவித

முக்கியமாக ஸ்ரீகாந்த் இதில் நிறைய கவிதைகளை சொல்கிறார். டோணி ஆரம்பிச்சிட்டான் போனி, மும்பை பாய்ஸ் மங்கிட்டாங்க, டி வில்லியர்ஸ் பல்ப் வாங்கிட்டான் என புரிந்தும், புரியாமல் ஸ்ரீகாந்த் பேசி வருகிறார். இதன் காரணமாகவே இவரது பேச்சு இணையம் முழுக்க வைரல் ஆகி உள்ளது. அதே சமயம் ஆர்ஜே பாலாஜி அவரிடம் கேட்கும் கேள்விகளும், அதற்கு இவர் சொல்லும் பதிலும் பிரபலமாகி உள்ளது.

மரியாதை கிடையாது பாஸ்

மரியாதை கிடையாது பாஸ்

ஸ்ரீகாந்த் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதால்தான் அவருடன் எல்லா கிரிக்கெட் வீரர்களும் நல்ல நட்பில் இருக்கிறார்கள். இதனால் அவர் சச்சின் தொடங்கி அஸ்வின் வரை எல்லோரையும் ''வாடா, போடா'' என்றுதான் கூப்பிட்டு வருகிறார். இந்திய வீரர்களை மட்டுமில்லாமல் எல்லா நாட்டு வீரர்களையும் அவர் இப்படித்தான் அழைத்து வருகிறார்.

எதிர்பார்ப்பு

இதன் காரணமாகவே ஸ்ரீகாந்த் பேச்சை கேட்க பலரும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இவர் ''ஆர்ஜே பாலாஜி தமிழ் கமெண்ட்ரி வேற லெவல். ஸ்ரீகாந்த் ப்ரோ தெறிக்க விடுறீங்க'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சிலருக்கு பிடிக்கவில்லை

சிலருக்கு பிடிக்கவில்லை

அதே சமயம் இவரது பேச்சுக்கு எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது. ஸ்ரீகாந்த் வீரர்களை மரியாதை இல்லாமல் பேசுவது பலருக்கும் பிடிக்கவில்லை. இப்படி வீரர்களை ஸ்ரீகாந்து பேசுவது பெரிய தவறு என்று பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Krish Srikanth IPL match Tamil commentary becomes viral in social media.
Story first published: Monday, April 9, 2018, 16:18 [IST]
Other articles published on Apr 9, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற