For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் பெளலிங்.. சாம் ஹாட்ரிக்.. கெயில் இல்லாமல் வென்ற பஞ்சாப்! மட்டமாக பேட்டிங் செய்த டெல்லி!!

மொஹாலி : 2019 ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால், மிகவும் மட்டமான பேட்டிங்கால் டெல்லி அணி மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து தோல்வி அடைந்தது.

வாவ்! முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்! வாவ்! முதல் பந்திலேயே டெல்லி அதிர்ச்சி.. இன்னும் அதே தரமான ஸ்பின்னர்தான்.. அஸ்வின் கலக்கல்!

பஞ்சாப் துவக்கம்

பஞ்சாப் துவக்கம்

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் இல்லாத நிலையில், ராகுலுடன், சாம் கர்ரன் அணிக்கு துவக்கம் அளித்தார். ராகுல் 15, சாம் 20 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் அளித்தனர்.

பின் வரிசை ஏமாற்றம்

பின் வரிசை ஏமாற்றம்

அடுத்து மாயங்க் அகர்வால் 6 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து சர்ப்ராஸ் கான் 39, டேவிட் மில்லர் 43, மந்தீப் சிங் 29 ரன்கள் எடுத்து அணியை மீட்டனர். பின் வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெறுப்பேற்றினர்.

டெல்லி அணி பந்துவீச்சு

டெல்லி அணி பந்துவீச்சு

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 166 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்து தன் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் 3, ரபாடா 2, சந்தீப் லாமிச்சேன் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். சந்தீப் ஓவருக்கு 6.75, மோரிஸ் ஓவருக்கு 7.50, ரபாடா ஓவருக்கு 8 ரன்கள் என கொடுத்து இருந்தனர். அவேஷ் கான், ஹர்ஷால் பட்டேல் விக்கெட் எதுவுமின்றி, ஓவருக்கு 9 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர்.

ப்ரித்வி ஷா டக் அவுட்

ப்ரித்வி ஷா டக் அவுட்

அடுத்து டெல்லி அணி பேட்டிங் செய்தது. இன்னிங்க்ஸின் முதல் பந்திலேயே அஸ்வின், ப்ரித்வி ஷாவை டக் அவுட் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் தவான் 30, ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் எடுத்து நிதான ஆட்டம் ஆடினர்.

ரிஷப் பண்ட், கோலின் கூட்டணி

ரிஷப் பண்ட், கோலின் கூட்டணி

அடுத்து ரிஷப் பண்ட், கோலின் இங்கிராம் கூட்டணி அமைத்து அதிரடியாக ஆடினர். கையில் 7 விக்கெட்கள் இருக்க, கடைசி நான்கு ஓவர்களில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற அளவுக்கு போட்டி டெல்லி அணிக்கு சாதகமாக இருந்தது.

அந்த ரன் அவுட்!

அந்த ரன் அவுட்!

அப்போது 17வது ஓவரில் ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் மோரிஸ் அஸ்வினின் அருமையான எறிதலில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

இங்கிராம் அவுட்

இங்கிராம் அவுட்

அப்போது டெல்லி அணி 144 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. 18வது ஓவரில் சாம் கர்ரன் பந்துவீச்சில் நன்றாக ஆடி வந்த இங்கிராம் 38 ரன்களில் வெளியேறினார். அடுத்த இரண்டு பந்துகளில் ஹர்ஷால் பட்டேல் ஆட்டமிழந்தார்.

டெல்லியின் வெற்றிக் கனவு

டெல்லியின் வெற்றிக் கனவு

கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 19வது ஓவரில் ஹனுமா விஹாரி ஆட்டமிழக்க டெல்லி அணியின் வெற்றிக் கனவு அடியோடு புதைக்கப்பட்டது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சாம் கர்ரன் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ரபாடா, சந்தீப் வீழ்ந்தனர். டெல்லி அணி 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

பஞ்சாப் அணி சிறப்பான பந்துவீச்சால் இழந்த போட்டியை மீட்டு 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் 2, சாம் கர்ரன் 3, ஷமி 2, வில்ஜோன் 1 விக்கெட் வீழ்த்தினர். 18வது ஓவரின் முடிவில் ஒரு ஒரு விக்கெட், அடுத்து தான் வீசிய 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் என தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் வீழ்த்தி சாம் கர்ரன் ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

பரிதாபம்

பரிதாபம்

கடைசி 8 ரன்களை எடுப்பதற்குள், டெல்லி அணி 7 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது. எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், டெல்லி அணி கடும் அழுத்தத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று அட்டவணையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

Story first published: Tuesday, April 2, 2019, 0:49 [IST]
Other articles published on Apr 2, 2019
English summary
KXIP vs DC : Kings XI Punjab beat Delhi Capitals by 14 runs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X