For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாச்சு பாய்ஸ்.. தென்னாப்பிரிக்காவிடம் மோசமாக தோற்ற இந்தியா.. தொடரை இழந்தது

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது.

By Shyamsundar

செஞ்சுரியன்: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியை தழுவி இருக்கிறது. இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த முறையும் சரியாக விளையாடாமல் சொதப்பி இருக்கிறார்கள்.

களத்தில் இறங்கிய வீரர்கள் அனைவரும் வரிசையாக விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா மட்டுமே 47 ரன்கள் எடுத்தார்.

சென்ற இன்னிங்ஸில் நன்றாக ஆடிய கோஹ்லி வெறும் 5 ரன்களில் அவுட் ஆனார். இந்த போட்டியை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்தது. ஏய்டன் மார்க்ராம் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். ஹாசிம் அம்லா 82 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 4 விக்கெட் எடுத்தார். இஷாந்த் சர்மா 3 விக்கெட் எடுத்தார்.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய ஓப்பனிங் இந்த முறையும் சொதப்பியது. கோஹ்லி மட்டும் சுதாரித்து ஆடி 153 ரன்கள் எடுத்தார். முரளி விஜய் 46 ரன்கள் எடுத்தார். மோர்னி மோர்கல் அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

2வது பேட்டிங்

2வது பேட்டிங்

அதன்பின் தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கியது. இந்த முறை ஏ பி டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினார். 80 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். ஆனாலும் 258 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா 286 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்த நிலையில் எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப தொடங்கினார்கள். 9,4,5 என வரிசையாக சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரோஹித் சர்மா மட்டுமே 47 ரன்கள் எடுத்தார். இந்தியா 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று இருக்கிறது.

25 வருட வரலாறு

25 வருட வரலாறு

135 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. ரெயின்போ தேசத்தில் இந்திய அணி ஒரு முறை கூட வண்ணமயமாக விளையாடியது இல்லை. 25 வருடத்தில் ஒருமுறை கூட இந்தியா தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் தொடரை வென்றது இல்லை. இந்த முறை டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

Story first published: Wednesday, January 17, 2018, 16:28 [IST]
Other articles published on Jan 17, 2018
English summary
Indian team went South Africa for cricket tour. Second test match between India and held in SuperSport Park, Centurion. SA won the toss and choose to bat first. SA got 335 runs at the end of first day with 10 wickets. Ind got only 307. In second inning SA having got only 258. India got only 151 runs for all wicket. India lost the series by 2-0 margin.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X