For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2018இல் டெஸ்டில் அறிமுகமான 5 இந்திய வீரர்கள்.. 2 பேருக்கு மட்டும் அதிர்ஷ்டம் இல்லை!

மும்பை : இந்திய கிரிக்கெட்டிற்கு 2018இல் சில நல்ல புதிய வீரர்கள் கிடைத்தார்கள்.

அதில் டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்த ஆண்டு 5 வீரர்கள் அறிமுகம் ஆனார்கள்.

அவர்களில் ஒரு சிலர் முதல் சில போட்டிகளில் இருந்தே பட்டையைக் கிளப்பினார்கள். சிலரோ அடுத்தடுத்த போட்டி ஆட வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். அந்த 5 வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

ஜஸ்ப்ரிட் பும்ரா

ஜஸ்ப்ரிட் பும்ரா

பும்ரா ஒருநாள் போட்டியில் ஆடத் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தான் வாய்ப்பு பெற்றார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கேப் டவுன் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

ஜஸ்ப்ரிட் பும்ரா எப்படி?

ஜஸ்ப்ரிட் பும்ரா எப்படி?

ஒருநாள் போட்டிகள் போல டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், நம்பிக்கை அளிக்கும் வகையில் பந்து வீசி வருகிறார் பும்ரா. இந்த ஆண்டு இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயம் கலக்குவார்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் தான் இந்த ஆண்டின் அதிக விமர்சனம் செய்யப்பட்டு, பின்னர் பாராட்டப்பட்ட அறிமுக வீரர். டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பதவிக்கு தினேஷ் கார்த்திக் சரியில்லை, சாஹா காயத்தில் இருக்கிறார் என்ற காரணங்களால் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெற்றார்.

ரிஷப் பண்ட் கலக்கல்

ரிஷப் பண்ட் கலக்கல்

இவர் டி20 போட்டிகளுக்கு ஏற்ற வீரர் டெஸ்டுக்கு சரியாக வருவாரா என்ற கேள்விகள் இருந்தது. அதையெல்லாம் முறியடித்து 6 டெஸ்ட் போட்டிகளில் 1 சதம், 2 அரைசதம் அடித்து தன்னை நிரூபித்தார். விக்கெட் கீப்பிங்கில் அனுபவம் போதவில்லை என்ற விமர்சனத்தையும் சமாளித்து அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச்கள் பிடித்து ஒரே போட்டியில் அதிக கேட்ச்கள் என்ற உலக சாதனையை சமன் செய்தார்.

ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி

ஆல்-ரவுண்டராக அறியப்படும் ஹனுமா விஹாரி இங்கிலாந்து ஓவல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்றார். அந்த போட்டியில் ஒரு அரைசதமும் அடித்து விட்டார். ஆனால், அதன் பின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் ஹனுமாவின் இடத்தை ரோஹித் சர்மா எடுத்துக் கொண்டார். ஆஸ்திரேலிய தொடரில் ஹனுமா விஹாரி தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

ப்ரித்வி ஷா

ப்ரித்வி ஷா

அறிமுகம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பது போல இந்த 2018ஆம் ஆண்டில் அதிரடி அறிமுகம் பெற்றார் துவக்க வீரர் ப்ரித்வி ஷா. 18 வயதான இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகம் ஆகி முதல் இன்னிங்க்ஸில் சதம் அடித்து பட்டையைக் கிளப்பினார். அறிமுகமான முதல் போட்டியிலேயே ஏராளமான சாதனைகளை முறியடித்தார்.

ப்ரித்வி ஷா காயம்

ப்ரித்வி ஷா காயம்

இந்த ஆண்டு இதுவரை வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மட்டுமே ஆடியுள்ள ப்ரித்வி 2 டெஸ்ட் போட்டிகளில் 237 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் கலக்கலாம் என ஆசையாக வந்த ப்ரித்வி ஷா தற்போது காயத்தால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஷர்துல் தாக்குர்

ஷர்துல் தாக்குர்

துரதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாக வேகப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குரின் டெஸ்ட் அறிமுகத்தை தான் சொல்ல வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத் டெஸ்டில் அறிமுகமான ஷர்துல் தாக்குர் 10 பந்துகள் வீசிய நிலையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் அந்த போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அப்படி ஒரு கசப்பான அனுபவத்தை 2௦18ஆம் ஆண்டில் பெற்றார் ஷர்துல்.

Story first published: Tuesday, December 11, 2018, 16:58 [IST]
Other articles published on Dec 11, 2018
English summary
List of Indian players who made their Test debut in 2018
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X