For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னுடைய மிகப் பெரிய 'பிளஸ்' எது தெரியுமா?: முகமது ஷமி

By Siva

ஆக்லேண்ட்: இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு கோபமே வராது என்று பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா இதுவரை தான் ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தின் ஆக்லேண்ட் நகரில் இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் டோணி குறித்து பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறுகையில்,

அதிர்ஷ்டசாலி

அதிர்ஷ்டசாலி

நான் முதன்முதலில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 ஆகிய போட்டிகளில் ஆடியபோது அந்த அணிகளின் கேப்டன் டோணியாக இருந்ததால் நான் அதிர்ஷ்டசாலி ஆவேன்.

கோபம்

கோபம்

அவர் நான் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்வார். தவறுகள் பற்றி எப்பொழுதும் எதுவும் கூற மாட்டார்.

டோணி

டோணி

டோணிக்கு கோபமே வராது. அவர் மிகவும் அமைதியாக பேசுவார். ஒரு பந்துவீச்சாளருக்கு கேப்டனின் ஆதரவு இருப்பது நல்லது. அது தான் எனது மிகப்பெரிய பிளஸ் ஆகும்.

உலகக் கோப்பை

உலகக் கோப்பை

உலகக் கோப்பை போட்டிகள் உள்ளூர் போட்டிகளை விட சிறந்ததாக உள்ளது. இந்த போட்டிகளில் விளையாடுவது எனக்கு நிறைய நம்பிக்கை அளித்துள்ளது.

வெற்றி

வெற்றி

இந்தியாவில் உள்ள அனைவரும் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் வெற்றியை மனதில் வைத்து தான் விளையாடுகிறோம்.

Story first published: Saturday, March 14, 2015, 12:11 [IST]
Other articles published on Mar 14, 2015
English summary
Fast-improving paceman Mohammad Shami told that captain Dhoni never gets angry.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X