For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி, ஆம்லாவை ஓரமா உட்கார சொல்லுங்கப்பா.. பெரிய தலைகளை வீழ்த்திய ஆஸி. வீராங்கனை!

கூலிட்ஜ் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை மெக் லேனிங் அசத்தல் சாதனை ஒன்றை செய்து ஆடவர் கிரிக்கெட் வீரர்களில் தலைசிறந்த ஹஷிம் ஆம்லா மற்றும் விராட் கோலிக்கு சவால் விட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார்.

அதன் மூலம் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருக்ரியர் மெக் லேனிங்.

வெ.இண்டீஸ் - ஆஸ்திரேலியா போட்டி

வெ.இண்டீஸ் - ஆஸ்திரேலியா போட்டி

வெஸ்ட் இண்டீஸ்-இல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. அங்கே ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களில் 309 ரன்கள் குவித்து அசத்தியது.

அபார கூட்டணி

அபார கூட்டணி

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லேனிங் - அலிசா ஹீலி கூட்டணி அமைத்து 225 ரன்கள் குவித்தனர். மெக் லேனிங் 145 பந்துகளில் 121 ரன்கள் குவித்தார். பின் ஷமிலியா கொனேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அலிசியா ஹீலி 106 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார்.

13வது ஒருநாள் போட்டி சதம்

13வது ஒருநாள் போட்டி சதம்

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா 178 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மெக் லேனிங் அடித்த சதம் அவரின் 13வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.

சாதனை செய்தார்

சாதனை செய்தார்

மெக் லேனிங் 76 இன்னிங்க்ஸ்களில் 13 ஒருநாள் போட்டி சதங்களை அடித்து இருக்கிறார். ஆடவர் - மகளிர் கிரிக்கெட் இரண்டையும் சேர்த்து, குறைந்த இன்னிங்க்ஸ்களில் 13 சதத்தை எட்டி சாதனை புரிந்துள்ளார் மெக் லேனிங்.

கோலி, ஆம்லா எங்கே?

கோலி, ஆம்லா எங்கே?

இதே 13 ஒருநாள் போட்டி சதங்களை ஹஷிம் ஆம்லா 83 இன்னிங்க்ஸ்களிலும், விராட் கோலி 86 இன்னிங்க்ஸ்களிலும் எட்டி உள்ளனர். அந்த இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களையும் ஓரங்கட்டி இருக்கிறார் மெக் லேனிங்.

எந்த வீராங்கனையும் இல்லை

எந்த வீராங்கனையும் இல்லை

இந்த பட்டியலில் முதல் ஆறு இடங்களில் மெக் லேனிங் தவிர்த்து வேறு எந்த வீராங்கனையும் இல்லை. முதல் மூன்று இடங்களில் மெக் லேனிங், ஹஷிம் ஆம்லா, விராட் கோலி இருக்கின்றனர்.

அடுத்த மூன்று இடங்கள்

அடுத்த மூன்று இடங்கள்

அடுத்த மூன்று இடங்களில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் (86 இன்னிங்க்ஸ்கள்), டேவிட் வார்னர் (91 இன்னிங்க்ஸ்கள்), ஷிகர் தவான் (99 இன்னிங்க்ஸ்கள்) உள்ளனர். மகளிர் கிரிக்கெட், ஆடவர் கிரிக்கெட்டின் பல டி20 சாதனைகளை ஏற்கனவே உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 7, 2019, 19:52 [IST]
Other articles published on Sep 7, 2019
English summary
Meg Lanning breaks Virat Kohli and Hashim Amla’s ODI century record after hitting her 13th ODI century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X