For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் 4 சிக்ஸ்தான்.. அந்த ஜாம்பவான் ரெக்கார்டு காலி.. தல தோனி வெயிட்டிங்!

அபுதாபி : தோனி இன்னும் 4 சிக்ஸ் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் வீரர் ஒருவரை முந்த உள்ளார்.

2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. முதல் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெற உள்ளது.

அந்தப் போட்டியிலேயே தோனி இந்த சாதனையை செய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர் நெருக்கடிகள்.. அணி விவரங்கள்.. ஐபிஎல்லை சிறப்பாக எதிர்கொள்ள காத்திருக்கும் சிஎஸ்கேதொடர் நெருக்கடிகள்.. அணி விவரங்கள்.. ஐபிஎல்லை சிறப்பாக எதிர்கொள்ள காத்திருக்கும் சிஎஸ்கே

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்டிங்

அதிரடி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் எப்போதுமே தோனிக்கு இடம் உண்டு. கடைசி நேரம் வரை களத்தில் நின்று சில பந்துகளில் போட்டியை மாற்றி விடும் வல்லமை கொண்டவர் தோனி. ஆனால், வயதான நிலையில் அவரது பேட்டிங்கில் முந்தைய அதிரடி இருக்குமா? என்ற கேள்வி விமர்சகர்களால் கேட்கப்படுகிறது.

14 மாதம்

14 மாதம்

தோனி கடைசியாக 2019 ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் உள்ளூர் போட்டிகளிலும் அவர் ஆடவில்லை. சுமார் 14 மாதங்கள் எந்த கிரிக்கெட் போட்டியும் ஆடாத நிலையில் அவர் இருக்கிறார்.

அட்டகாசமான பார்ம்

அட்டகாசமான பார்ம்

அதே சமயம், சிஎஸ்கே அணியின் பயிற்சிகளின் போது தோனி அட்டகாசமான பார்மை வெளிப்படுத்தியதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் கூறி வருகின்றனர். 2020 ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராகவும் இருக்கலாம்.

ஏபி டிவில்லியர்ஸ்

ஏபி டிவில்லியர்ஸ்

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்-இன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்துள்ளது. தோனி ஐபிஎல் தொடரில் 209 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

இன்னும் 4 சிக்ஸர்கள்

இன்னும் 4 சிக்ஸர்கள்

இரண்டாம் இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் இருக்கிறார். அவர் 212 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் தோனி, டி வில்லியர்ஸ்-ஐ வீழ்த்த முடியும். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

முதல் இடத்தில் யார்?

முதல் இடத்தில் யார்?

இதே அதிக சிக்ஸர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கிறிஸ் கெயில். அவர் ஐபிஎல் தொடரில் 326 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவரது சாதனையை வேறு யாரும் நெருங்க முடியாத நிலையே உள்ளது. தோனி சிக்ஸர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கா விட்டாலும் வேறு பல ஐபிஎல் சாதனைப் பட்டியல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கேப்டன்சி

கேப்டன்சி

அதிக ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் சிஎஸ்கே அணிக்கு 10 சீசன்களிலும், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒரு சீசனிலும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். மொத்தம் 174 ஐபிஎல் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

வெற்றிகள்

வெற்றிகள்

அதே போல, அதிக ஐபிஎல் போட்டிகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையும் தோனி வசமே உள்ளது. 174 போட்டிகளில் 104 போட்டிகளை வென்று கொடுத்துள்ளார் கேப்டன் தோனி. அவரது வெற்றி சராசரி 60.11 ஆகும்.

விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை

விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை

கேப்டன்சி மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் சாதனை புரிந்துள்ளார் தோனி. ஐபிஎல் தொடரில் 132 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார் தோனி. அதில் 38 ஸ்டம்பிங் அடக்கம். ஐபிஎல் தொடரில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பரும் தோனியே.

Story first published: Friday, September 18, 2020, 20:39 [IST]
Other articles published on Sep 18, 2020
English summary
Chennai Super KIngs (CSK) Latest News Updates in Tamil : MI vs CSK : Dhoni can beat Ab de Villiers in most sixes in IPL record. De Villiers hit 212 sixes while Dhoni hit 209 sixes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X