For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் கூட விறுவிறுப்போ, உற்சாகமோ இல்லை.. களையிழந்து போன ஐபிஎல் 2016!

By Jeyarajaseker

சென்னை: ஐபிஎல் என்றாலே உற்சாகம், கொண்டாட்டம், கிளாமர் என்பது போய் தொங்கித் துவண்டு போய்க் கிடக்கிறது இந்த சீசன். போட்டிகளில் ஒரு விறுவிறுப்பு இல்லை. மொக்கையாக காணப்படுகிறது தொடரே.

டோணி தலைமையிலான புனே அணி ரொம்பக் கேவலமாக ஆடி வருவதிலிருந்தே இந்தத் தொடர் எந்த அளவுக்கு மொக்கையாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ரசிகர்கள் மத்தியிலும் கூட போட்டிகளுக்கு ஆதரவு இல்லை. பல மைதானங்கள் காற்று வாங்குகின்றன. வீரர்கள் மத்தியிலும் கூட ஒரு எழுச்சி இல்லை.

சிஎஸ்கே இல்லை

சிஎஸ்கே இல்லை

இந்த முறை போட்டிகள் சொதப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை என்பதுதான் முக்கியமாக கூறப்படுகிற காரணம். சூதாட்டம் காரணமாக சென்னைக்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. கூடவே ராஜஸ்தான் ராயல்ஸும் இல்லை.

டோணி இருந்தும்

டோணி இருந்தும்

டோணி நடப்புத் தொடரில் வேறு அணிக்குத் தலைமை தாங்கி ஆடி வருகிறார் என்றாலும் கூட சிஎஸ்கே என்ற அந்த மந்திரச் சொல் இல்லை என்பதுதான் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் ரசிகர்கள்

இந்தியா முழுவதும் ரசிகர்கள்

சிஎஸ்கேவுக்கு தமிழகத்தில் மட்டும்தான் ரசிகர்கள் என்றில்லை, நாடு முழுவதும் உள்ளனர் என்பதுதான் இந்தத் தாக்கம் பெரிதாக இருக்க முக்கியக் காரணம். காரணம், அணியின் அமைப்பு அப்படி.

அட்டகாசமான வீரர்கள்

அட்டகாசமான வீரர்கள்

டோணி, மெக்க்கலம், பிராவோ, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா என பல விதமான சூப்பர் வீரர்களின் கலவையாக விளங்கி வந்தது சிஎஸ்கே. அது இல்லாமல் போனதால் ரசிகர்களிடையே ஒரு விதமான சோர்வு வந்து விட்டது.

ஒரேயடியாக ஆடினால் எப்படி

ஒரேயடியாக ஆடினால் எப்படி

இன்னொரு முக்கியக் காரணம் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவது. டி20 உலகக் கோப்பைத் தொடர் முடிந்த கையோடு இது தொடங்கி விட்டதால் சலிப்புத் தட்டி விட்டது அனைவருக்குமே.

தேர்தல் குறுக்கீடு

தேர்தல் குறுக்கீடு

தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமா, கிரிக்கெட்டைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் தேர்தல் சூடு படு ஹாட்டாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான அரசியல் நிகழ்வுகள் இருப்பதாலும், சிஎஸ்கே இல்லாததாலும் மக்கள் முழுமையாக திசை திரும்பி விட்டனர்.

முக்கியஸ்தர்கள் இல்லை

முக்கியஸ்தர்கள் இல்லை

மேலும் இந்தத் தொடரில் ஸ்டீவன் ஸ்மித், கெவின் பீட்டர்சன், ஸ்டார்க் போன்ற முக்கியஸ்தர்கள் காயம் காரணமாக ஆடவில்லை. கெய்ல் சோபிக்கவில்லை.

இப்படிப் பல காரணங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் பட்டையைக் கிளப்பத் தவறி விட்டன என்று சொல்லலாம்.

Story first published: Thursday, May 12, 2016, 16:24 [IST]
Other articles published on May 12, 2016
English summary
IPL 2016 is not a hot affair comparing with the earlier versions.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X