For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎலில் இது தான் தோனிக்கு கடைசி வருடம்.. கண்டிப்பா அடுத்த வருசம் விளையாட மாட்டார்! கையிப் அதிர்ச்சி

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உடன் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று முகமது கையிப் கூறியுள்ளார். நடப்பு சீசனில் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குஜராத் அணி 18 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதன் மூலம் அவர்களுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் சென்னை அணி தற்போது 13 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடைசி போட்டியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Mohammed kaif reveals MS Dhoni might retire from ongoing ipl season

இதனால், பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே விளையாடினால், மீண்டும் தோனியை பார்க்க சென்னை ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஏனென்றால் தற்போது தோனிக்கு 41 வயது ஆகிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவது கஷ்டம் தான்.

இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது கையிப், ஐ பி எல் கிரிக்கெட்டில் இதுதான் தோனிக்கு கடைசி ஆண்டு என்று கூறினார். இது தொடர்பாக பேசிய அவர் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று தான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதுதான் கடைசி சீசன் என்று தோனி பல சான்றுகளை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டார் என்பதை சுட்டிக்காட்டிய கெயிப், தோனி எப்போதுமே தன்னுடைய எந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ரசிகர்களை யூகிக்க வைப்பார் என்று கூறினார். அதுதான் தோனியின் குணமாக இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Mohammed kaif reveals MS Dhoni might retire from ongoing ipl season

ஆனால் என்னை பொறுத்தவரை அடுத்த ஆண்டு தோனி விளையாட மாட்டார் என்று தான் என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது என்று குறிப்பிட்ட கையிப், கவாஸ்கர் போன்ற ஜாம்பவான் எந்த கிரிக்கெட் வீரிடமும் இருந்து ஆட்டோகிராப் கேட்டு நான் பார்த்ததில்லை என்று சுட்டிக்காட்டினார். ஆனால் அவரே தோனியிடம் சட்டையில் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார் என்றால் தோனியின் மகத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று முகமது கையிப் கூறினார்.இந்த சம்பவங்களை பார்க்கும் போது, இது கடைசி சீசனாக தோனிக்கு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது 7வது லீக் ஆட்டத்தை விளையாடிவிட்டது. இதனால் ரசிகர்களுக்கு பிரியா விடை அளிக்கும் வகையில் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை சுற்றி நன்றி தெரிவித்துக் கொண்டனர். தோனியும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தார். இதனை வைத்து பார்க்கும் போது தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, May 16, 2023, 23:35 [IST]
Other articles published on May 16, 2023
English summary
Mohammed kaif reveals MS Dhoni might retire from ongoing ipl season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X