For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“தரமான செய்கை சார்” இந்தியா குறித்த கில் கிறிஸ்டின் பேச்சு.. சவால் விடுத்து எச்சரித்த முகமது கைஃப்!

மும்பை: 2004ம் ஆண்டு இருந்த ஒரு பலம் ஆஸ்திரேலிய அணிக்கு தற்போதும் இருப்பதால் இந்தியாவை நிச்சயம் வீழ்த்தும் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதற்கு முகமது கைஃப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் நாக்பூரில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைசி பார்டர் கவாஸ்கர் கோப்பை என்பதை தாண்டி ஆஸ்திரேலியாவுக்கு பழிதீர்க்க கடைசி வாய்ப்பு இதுதான் எனக்கூற வேண்டும். ஏனென்றால் கடைசியாக நடந்த 3 தொடர்களிலும் இந்தியா மட்டுமே வெற்றி கண்டுள்ளன.

 ஆஸ்திரேலியா தான் டெஸ்ட் தொடரை வெல்லும்.. இந்தியாவில் மேஜிக் நிகழ்த்தும்.. கில்கிறிஸ்ட் நம்பிக்கை ஆஸ்திரேலியா தான் டெஸ்ட் தொடரை வெல்லும்.. இந்தியாவில் மேஜிக் நிகழ்த்தும்.. கில்கிறிஸ்ட் நம்பிக்கை

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என ஆஸ்திரேலிய அணி முணைப்புடன் உள்ளது. அது நிச்சயம் நடக்கும் என முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில் கிறிஸ்ட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த முறை நிச்சயம் வெல்வார்கள் என நினைக்கிறேன். 2004ம் ஆண்டு தான் கடைசியாக இந்தியாவை இந்திய மண்ணிலேயே ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதே போன்ற படையை தற்போது பார்க்க முடிகிறது எனக்கூறியிருந்தார்.

கைஃப் பதிலடி

கைஃப் பதிலடி

இந்நிலையில் இதற்கு முகமது கைஃப் பதில் கொடுத்துள்ளார். அதில், இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி 18 வீரர்களுடன் வந்துள்ளது. இதுவரை 18 பேருடன் அவர்கள் வந்ததே கிடையாது. இதன் மூலமே அவர்கள் பயத்துடன் வந்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் இந்திய அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவது மிகவும் கடினம் என்பது தெரியும்.

சமாளிக்க முடியுமா?

சமாளிக்க முடியுமா?

ஆஸ்திரேலியா பலமான அணி தான் இல்லை எனக்கூறவில்லை. ஆனால் அவர்களால் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் போன்ற ஸ்பின்னர்களை சமாளிக்க முடியுமா? அவர்கள் எங்களது ஸ்பின்னர்களை சமாளித்தால் மட்டுமே ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். காப்பா டெஸ்டில் விராட் கோலி இல்லை. ஆனால் இந்த முறை அவரும் அணிக்குள் வந்துவிட்டார் என்பது கூடுதல் பலம் என கைஃப் கூறியுள்ளார்.

நிறைய பிரச்சினைகள்

நிறைய பிரச்சினைகள்

ஆஸ்திரேலிய நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டு வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, வார்னர், ஸ்மித் மீதான தடைகளை தாண்டி இந்த சுற்றுப்பயணத்தை செய்கிறது. இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் இளம் படையே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. கடும் காயத்தில் இருந்து வருபவர்களை பலம் எனக்கூறக்கூடாது. பிறகு சிரமமாகிவிடும் என கைஃப் கூறியுள்ளார்.

Story first published: Friday, February 3, 2023, 18:56 [IST]
Other articles published on Feb 3, 2023
English summary
Former Indian cricketer Mohammed kaif sends a perfect reply to Adam gilChrist over his Test series comment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X