For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புதிய பிட்ச் கண்டிஷன்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு எப்படி வழிவகுக்கப்போகிறது மோதிரா ஸ்டேடியம்

அகமதாபாத்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் நுழையும் அணியை தீர்மானிக்க அகமதாபாத் பிட்ச் தீர்மாணிக்கவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொய்திரா ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் கடும் போட்டி நிலவுகிறது.

3வது டெஸ்ட், பகிலரவு போட்டியாக இது நடத்தப்படவுள்ளது. மேலும் இப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள் என்பதை தீர்மானிக்கவுள்ளது. இதனால் மொய்திரா மைதானத்தின் பிட்ச் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

அகமதாபாத்

அகமதாபாத்

கடந்த 2015ம் ஆண்டும் மூடப்பட்ட சர்தார் பட்டேல் மைதானம், மறுசீரமைப்பு செய்யப்பட்டு தற்போது மொய்திரா என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 பேர் வரை அமரக்கூடிய இந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆகும். இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் போட்டிதான் இங்கு நடைபெறும் முதல் சர்வதேச போட்டியாகும்.

பந்தின் வேகம்

பந்தின் வேகம்

இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். அதே போல இதற்கு முன்னர் அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி ஒரே ஒரு முறை வங்கதேசத்துடன் பகலிரவு போட்டியில் ஆடியுள்ளது. அப்போட்டியில் பந்து தரையில் இருந்து எளிதாக டேர்ன் ஆகியதால் பேட்ஸ்மேன்களால் பந்தை சரியாக கணிக்க முடியவில்லை. எனவே இதுவும் அப்படி இருக்க வாய்ப்புள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

பகலிரவு போட்டிக்கு வழக்கமான டெஸ்ட் பிட்ச் போன்று இல்லாமல், புற்கள் அதிகமாக போடப்பட்டுள்ளது. அப்போதுதான் பந்து எளிதில் தேய்ந்து போகாமல் பல பலவென்று இருக்கும். அதே போல் பந்தின் மீது அதிகளவில் லாக்கூர் ரசாயனம் பூசப்படும். இவை இரண்டும் இரவு நேரத்தில் பந்தை தெளிவாக காட்ட உதவுகிறது. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு வசதியாக இருக்கும்.

ஸ்லோ ட்ராக்

ஸ்லோ ட்ராக்

மோத்திரா மைதான பிட்ச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் அளவில் உதவும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 6mm அளவுக்கு புற்கள் போடப்பட்டிருக்கும். எனவே பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும் என கூறப்படுகிறது. அதே போல பந்தின் நிறம், ஆட்ட நேரம் ஆகியவையும் அவர்களுக்கு உதவுகிறது.

யாருக்கு வெற்றி

யாருக்கு வெற்றி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து ஏற்கனவே நுழைந்து விட்டது. இந்நிலையில் மற்றொரு அணியாக நுழைவதற்கு இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பிரகாசமான வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணி 3வது டெஸ்டில் தோற்றால் இறுதிப்போட்டிகான வாய்ப்பு பறிபோகும். இதனால் இரு அணிகளும் கடுமையாக போராடும்.

Story first published: Sunday, February 21, 2021, 19:25 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Motera pitch influence race to World Test Championship final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X