நடப்பு சாம்பியன் மும்பைக்கு ஹாட்ரிக் தோல்வி... கடைசி பந்தில் டெல்லிக்கு முதல் வெற்றி

Posted By:
டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது

மும்பை:ஐபிஎல் சீசன் 11ல் மும்பையில் இன்று நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் விளையாடிய மும்பை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து கடைசி பந்தில் 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் இந்த சீசனில் டெல்லிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. மும்பை அணி மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.

ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து அணிகளுமே தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வென்று, தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.

Mumbai Indians and Delhi Daredevils looking for first win in IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராய.ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒன்றில் வென்று, 2 புள்ளிகளுடன் உள்ளன.

அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி டேர்டெவில்ஸ அணிகள் இரண்டு ஆட்டங்களிலுமே தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் நடைபெறும் சீசனின் 9வது ஆட்டத்தில் மும்பையும், டெல்லியும் மோதுகின்றன. இதில் முதல் வெற்றியைப் பெறப் போவது யார் என்பது தெரியவரும்.

இதுவரை இரு அணிகளும் 20 முறை மோதியுள்ளன. அதில் 11 முறை மும்பை அணியும், 9 முறை டெல்லி அணியும் வென்றுள்ளன. மும்பை மைதானத்தில் நடந்துள்ள 6 ஆட்டங்களில், 5ல் மும்பை வென்றுள்ளது.

இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெறுவதற்காக இரு அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன. டாஸை வென்ற டெல்லி, பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு194 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் 53, எவின் லூயிஸ் 48, இஷாண் கிஷண் 44 ரன்கள் சேர்த்தனர். டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, கடைசி பந்தில், 3 விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் கவுதம் கம்பீர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5.1 ஓவர்களில் 50 ரன்களுக்கு முதல் விக்கெட் இழந்தபோது, ஜாசன் ராய், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினர். பந்த் 47 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வேல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஜாசன் ராய் ஆட்டமிழக்காமல், 53 பந்துகளில், 6 பவுண்டரி, 6 சிக்சருடன், 91 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெல்லி தனது முதல் வெற்றியை சுவைத்தது. அதே நேரத்தில் மும்பைக்கு மூன்றாவது தோல்வி கிடைத்துள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mumbai indians and delhi daredevils to clash in the 9th match of the IPL season. Both the teams are looking for their first win in this season.
Story first published: Saturday, April 14, 2018, 16:47 [IST]
Other articles published on Apr 14, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற