For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

118 ரன்களுக்கு சுருண்டது ஹைதராபாத்... 87 ரன்களுக்கு மூட்டைக் கட்டியது மும்பை!

தொடர்ந்து பெற்று வரும் தோல்விகளை தவிர்க்க மும்பை போராடுகிறது. அதே நேரத்தில் வெற்றியின் பாதைக்கு திரும்ப ஹைதராபாத் தீவிரமாக உள்ளது. இரு அணிகளும் மும்பையில் இன்று மோதுகின்றன.

Recommended Video

IPL 2018, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது

மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் மிகவும் குறைவான ஸ்கோரான 118 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் எடுத்தது. ஆனால் அதையும் எட்ட முடியாமல், 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து மும்பை 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 11வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சிஎஸ்கே இரண்டாவது இடத்தில் உள்ளது.

போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. கிட்டத்தட்ட பெரும்பாலான அணிகள் தலா 6 ஆட்டங்களை முடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களுடைய ஆறாவது ஆட்டத்தில் விளையாடின.

தோல்வியை தவிர்க்க போராட்டம்

தோல்வியை தவிர்க்க போராட்டம்

இந்த சீசனின் துவக்க ஆட்டங்களில் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடியது. ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா அணிகளை வென்ற ஹைதராபாத் அணி, பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளிடம் தோலவியடைந்தது. நடப்பு சாம்பியனான மும்பை அணி இதுவரை ஆடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. சிஎஸ்கே, ஹைதராபாத், டெல்லி அணிகளிடம் தோல்வியடைந்த மும்பை அணி, பெங்களுருவை வென்றது. கடைசியாக ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.

வாழ்வா சாவா நிலையில் உள்ளது

வாழ்வா சாவா நிலையில் உள்ளது

இதுவரை நான்கு தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், அடுத்து விளையாடும் 9 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 7ல் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையேயான இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் வென்றது.

ஹைதராபாத் சுருண்டது

ஹைதராபாத் சுருண்டது

மும்பையில் நடந்த ஆட்டத்தில் டாஸை வென்ற மும்பை பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ஹைதராபாத் 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது. இந்த சீசனில் மிகவும் குறைவான ஸ்கோர் இதுவாகும். கேப்டன் கேன் வில்லியம்சன், யூசுப் பதான் அதிகபட்சமாக, தலா 29 ரன்கள் எடுத்தனர். மும்பையின் மயாங்க் மார்கண்டே, ஹார்திக் பாண்டயா, மிச்சைல் மெச்சிகன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

மோசமான தோல்வி

மோசமான தோல்வி

119 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, மிகவும் மந்தமாக ஆடியது. முதல் 6 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், அதற்குள் 3 விக்கெட்களை இழந்தது. சூர்யகுமார் யாதவ் 34, குருணால் பாண்டயா 24 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஹைதராபாத் அணியின் சித்தார்த் கவுல் 3, ரஷித் கான், பாசில் தம்பி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு ஹைதராபாத் முன்னேறியது.

Story first published: Tuesday, April 24, 2018, 23:56 [IST]
Other articles published on Apr 24, 2018
English summary
Mumbai Indians trying to come out of the defeat mode, while SRH looking to bounce back to the winning mode.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X