67 சிக்ஸர்.. 149 பவுண்டரி.. மும்பையில் ஒரே போட்டியில் 1,045 ரன் அடித்த இளம் புயல்!

Posted By:

மும்பை: கிரிக்கெட் உலகில் பெரிய வீரர்கள் செய்யும் சாதனையை விட இளம் வீரர்கள் செய்யும் சாதனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. முக்கியமாக பள்ளி அளவில் நடக்கும் போட்டியில் அதிக சாதனைகள் செய்யப்படுகிறது.

அந்த வகையில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் 1,045 ரன்கள் அடித்துள்ளான். ஒரே போட்டியில் இவன் இத்தனை ரன்கள் அடித்து இருக்கிறான்.

தற்போது இவனுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்திய அணியில் இவன் கலக்குவான் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து

தொடர்ந்து

மும்பையில் பள்ளி அளவிலான தொடரில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. யஷ்வந்த் ராவ் சவாண் என்ற அணிக்காக விளையாடிய 'தனிஸ்க் கவாத்' என்ற மாணவன் இந்த சாதனையை செய்துள்ளான். இரண்டு நாள் தொடர்சியாக விளையாடி 1,045 ரன்கள் எடுத்துள்ளான்.

சிக்ஸ் பவுண்டரி

சிக்ஸ் பவுண்டரி

இரண்டு நாட்களும் இவன் அதிகமாக ஓடாமல் ரன் எடுத்துள்ளான். மொத்தம் இந்த போட்டியில் 67 சிக்ஸர் அடித்து இருக்கிறான். அதேபோல் 149 பவுண்டரி அடித்து சாதனை படைத்துள்ளான்.

முறியடிப்பு

முறியடிப்பு

இதன் மூலம் இவன் பல பள்ளி அளவிலான சாதனைகளை முறியடித்துள்ளான். யாரும் உலக அளவில் எந்த பள்ளி போட்டியிலும் 149 பவுண்டரிகள் அடித்தது இல்லை. இதுவரை அடிக்கப்பட்ட தனிநபர் ரன் 628 மட்டுமே ஆகும்.

புதிய ஆர்டர்

புதிய ஆர்டர்

முதலில் இந்த சிறுவன் 2 அல்லது 3 வது இடத்தில் மட்டும் இறங்கி இருக்கிறான். இந்த போட்டியில் கோச்சிடம் கெஞ்சி முதல் இடத்தில் இறங்கியுள்ளன. அவனது இந்த சாதனையை தற்போது எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Mumbai school boy named Tanishq Gavate creates new record by knocking 1,045 runs in navi Mumbai Shield invitational cricket tournament. He slashed 149 fours and 67 sixes in the single match.
Story first published: Wednesday, January 31, 2018, 10:54 [IST]
Other articles published on Jan 31, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற