முக்கியமான போட்டிகளில் தோற்பதே வாடிக்கையாகிவிட்டது.. 'ராசியில்லா' நியூசி. கேப்டன் விரக்தி

Posted By:

திருவனந்தபுரம்: முக்கியமான நேரத்தில் தோற்பதே வாடிக்கையாகிவிட்டது என்று தனது அணியின் செயல்பாடு குறித்து வேதனை தெரிவித்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கனே வில்லியம்சன்.

இந்தியா வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஒருநாள் போட்டித்தொடரில் முதல் இரு போட்டிகளிலும், தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றன. கான்பூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை சுவைத்து கோப்பையை கைப்பற்றியது.

அதேபோல டி20 தொடரிலும், முதல் இரு போட்டிகளிலும் தலா 1 வெற்றி பெற்றன இவ்விரு அணிகளும்.

அதே 6

அதே 6

நேற்று திருவனந்தபுரம் மைதானத்தில், நடைபெற்ற 3வது டி20 போட்டி என்பது இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இப்போட்டியிலும், ஒருநாள் போட்டியை போலவே 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் டி20 கோப்பையையும் இந்தியா கைப்பற்றி அசத்தியது.

இரு அணிகளும் பெஸ்ட்

இரு அணிகளும் பெஸ்ட்

இதுகுறித்து கனே வில்லியம்சன் நிருபர்களிடம் கூறுகையில், இத்தொடர் முழுக்க நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடியது. பந்து வீச்சாளர்களில், சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு மிக அற்புதமாக இருந்தது. இரு அணிகளுமே சிறப்பாக ஆடின.

இன்னும் ரொம்ப தூரம்

இன்னும் ரொம்ப தூரம்

அதேநேரம், தொடரை தீர்மானிக்கும் முக்கிய போட்டிகளில் நியூசிலாந்தால் வெற்றி பெற முடியவில்லை. இரு தொடர்களிலும் இதேபோல நடந்துவிட்டது. இந்த விஷயத்தை சரி செய்ய வேண்டும். இதில் நாங்கள் ரொம்ப தூரம் போக வேண்டியுள்ளது என்றார் அவர்.

தென் ஆப்பிரிக்காவும் இப்படித்தான்

தென் ஆப்பிரிக்காவும் இப்படித்தான்

நியூசிலாந்து இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. கடந்த உலக கோப்பை தொடரில் பைனல் வரை செல்ல வாய்ப்பு கிடைத்தும், பதற்றத்தால் ஆஸி.யிடம் எளிதாக வீழ்ந்தது. எனவே நியூசிலாந்து எப்போதுமே தென் ஆப்பிரிக்காவை போலவே திறமை இருந்தும், அதிருஷ்டம் இல்லாத அணியாகவே வர்ணிக்கப்பட்டு வருகிறது.

Story first published: Wednesday, November 8, 2017, 14:58 [IST]
Other articles published on Nov 8, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற