என்னால முடியலங்க… எவ்வளவோ பயிற்சி எடுத்தும் தோத்துட்டேன்… டாஸ் குறித்து புலம்பிய கோலி

பெங்களூரு:போட்டியில் டாசை நிர்ணயம் செய்வதில் நான் பயிற்சிகள் பல எடுத்தும் தோற்று விட்டேன் என்று பெங்களூரு கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 49வது போட்டி பெங்களூருவில் தொடங்க இருந்தது. அந்த போட்டி அட்டவணைப்படி பெங்களூரு அணியும், ராஜஸ்தான் அணியும் களம் காண வேண்டும்.

திட்டமிட்டப்படி இவ்விரு அணிகளும் களத்தில் விளையாட தயாராகின. டாசும் போடப்பட்டது. அந்த டாசில் ராஜஸ்தான் அணி வென்றது. பந்துவீச்சை தேர்வு செய்ததாக அறிவித்தது.

இன்னுமா புரியல..? அந்த தமிழக வீரர் உலக கோப்பைக்கு அவசியம் தேவை.. கங்குலியின் சூப்பர் சப்போர்ட்

வந்தது மழை

வந்தது மழை

அதன்படி போட்டி துவங்குவதற்கான நேரமும் வந்தது. அதோடு மழையும் வந்தது. அதனால் திட்டமிட்டப்படி சரியான நேரத்துக்கு போட்டி தொடங்க வில்லை.

மழையால் தாமதம்

மழையால் தாமதம்

முக்கியமான இந்த போட்டி, தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இந்த போட்டி முக்கியமானதாகும். போட்டி துவங்கும் முன்பு, அதற்கான டாஸ் போடப்பட்டது.

பயிற்சி எடுத்தேன்

பயிற்சி எடுத்தேன்

ஆனால், வழக்கம் போல பெங்களூரு கேப்டன் கோலி அந்த டாசிலும் தோற்று விட்டார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டாஸ் போடுவதற்காக நான் பயிற்சி செய்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

10 முறை டாசில் தோல்வி

10 முறை டாசில் தோல்வி

13 போட்டிகளில் 10 முறை டாசை இழந்துள்ளேன். இந்த மைதானம் இரண்டு அணிகளுக்கும் சாதகமான ஒன்றாக இருக்கும். எனவே சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மேலும், இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. எனவே இந்த போட்டியினை மகிழ்ச்சியாக சுதந்திரமாக விளையாட விரும்புகிறோம் என்று கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Once again, i lost toss says royal challengers bangalore captain virat kohli against rajasthan royals match.
Story first published: Tuesday, April 30, 2019, 23:02 [IST]
Other articles published on Apr 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X