For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள், விக்கெட்கள் எடுத்தவர்களில் இந்திய வீரர்களே இல்லையா?

பெங்களூரு : ஆசிய கோப்பை போட்டிகள் 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஆசிய கோப்பை போட்டிகள் யுனைடெட் அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 15 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன் இந்தியா இதுவரை அதிக கோப்பைகளை வென்ற அணியாக திகழ்கிறது. இந்திய அணி இதுவரை 6 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும்,பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. பங்களாதேஷ் அணி 2 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள போதிலும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

Overall Asia cup records srilankan players are on top


மேலும் இந்திய அணி ஆசியகோப்பை தொடரை தொடர்ந்து மூன்று முறை வென்று சாதனை படைத்துள்ளது (1988,1991,1995)

தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளை பொறுத்தவரை இலங்கை வீரர்களே கோலோச்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா ஆசிய கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார் (1220 ரன்கள்). மேலும் அவர் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் வரிசையிலும் முதல் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது (6 சதங்கள்).

இந்திய வீரர்களில் விராட் கோஹ்லி 3 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவர் இந்த ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் இலங்கை அணி முத்தையா முரளிதரன் 30 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு இலங்கை வீரர் அஜந்தா மெண்டிஸ் 13 ரன்களை கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியதே ஆசிய கோப்பை போட்டிகளின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.
Story first published: Wednesday, September 12, 2018, 10:57 [IST]
Other articles published on Sep 12, 2018
English summary
Overall Asia cup records - srilankan players are on top
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X