For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின் இந்திய அணி 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வாங்கவில்லை என்று ஊடகங்களால் தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே தன்னுடைய ஆறாவது உலகக் கோப்பையில் தான் சாம்பியன் பட்டத்தை வென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட் சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்

 எப்படி முடியும்

எப்படி முடியும்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களுக்கு அந்த நிலை தான் ஏற்பட்டது. உலகக்கோப்பைகளை தொடர்ந்து வெல்ல முடியாது. ஏதோ மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு வந்து உலக கோப்பையை உடனே வென்று தந்து விட்டார். இதனால் அனைவரும் அதே போல் செயல்பட வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் சாத்தியமாகும். விராட் கோலி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையும், 2013 சாம்பியன்ஸ் கோப்பையும் வென்றிருக்கிறார்.

 ஏன் அழுத்தம்?

ஏன் அழுத்தம்?

ரோகித் சர்மாவும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறார். எனவே இரண்டு வீரர்களுக்கும் கொஞ்சம் சுவாசிக்க இடம் கொடுங்கள். தொடர்ந்து இருதரப்பு கிரிக்கெட் போட்டி ஐபிஎல் போட்டி என பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். ஆனால் ஐசிசி தொடர்களில் நெருக்கடியான கட்டங்கள் உங்களுக்கு சாதகமாக சென்றால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும். விராட் கோலி 3 ஆண்டுகளுக்கு மேல் சதம் விளாசவில்லை என்று அனைவரும் பேசினார்கள்.ஆனால் அதில் 8 மாதம் கொரோனா காலமாக ஒரு போட்டி கூட நடைபெறவில்லை.

இந்தியாவின் பலம்

இந்தியாவின் பலம்

அதன் பிறகு நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டியில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டார். இந்த சூழலில் யார் இப்படி கேள்வி கேட்கிறார்கள்? ஏன் இப்படி கேட்கிறார்கள்? இதை வைத்து அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள் என்று யோசிக்க தோன்றுகிறது. இந்திய அணியின் பலமே டாப் 3 வீரர்கள் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் மூன்று வீரர்களும் அதிக ரன்கள் அடித்து விடுவார்கள். இதில் இந்த மூன்று வீரர்களும் எப்படியாவது சொதப்பினால் மட்டுமே இந்திய அணிக்கு கடந்த காலங்களில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

ஷிகர் தவான் Vs இஷான் கிஷன்

ஷிகர் தவான் Vs இஷான் கிஷன்

ஆனால் நாம் ரோகித் சர்மாவையும்,விராட் கோலி பற்றி தான் நிறைய பேசியிருக்கிறோம். தவானும் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய வேலையை அமைதியாக செய்திருக்கிறார். ஆனால் அவரை யாரும் கொண்டாடுவதில்லை. தவானின் இடத்தை யார் தான் நிரப்புவார்கள். தவானுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டுமா இல்லை இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை பட்டை தீட்ட வேண்டுமா ?ஒரு பெரிய ஸ்கோர் அடித்ததால் இஷான் கிஷன் தேர்வு செய்வதை விட அணிக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன்.

சுப்மன் கில்லுக்கு பாராட்டு

சுப்மன் கில்லுக்கு பாராட்டு

இவ்விரண்டு வீரர்களிலும் யார் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்? யார் இந்திய அணிக்கு அதிக காலம் விளையாட கூடியவர்கள் என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சுப்மன் இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பேட்டிங்கில் அனைத்து ஷார்ட்களையும் ஆட கூடியவராக இருக்கிறார். ஹைதராபாத்தில் அவர் அடித்த இரட்டை சதம் அதற்கு நல்ல உதாரணம். இசான் கிஷன் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பாகவே சுப்மன் கில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். அதனால் தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Sunday, January 29, 2023, 10:29 [IST]
Other articles published on Jan 29, 2023
English summary
R Ashwin questions about winning the icc tournament and team selection சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X