For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரசிகர்கள் பலம் இருந்தாலும்.. சச்சினை வீழ்த்தினார்.. சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்வான அந்த ஜாம்பவான்

மும்பை : மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனை அடையாளம் காண ரசிகர்கள் இடையே கருத்துக் கணிப்பை நடத்தியது விஸ்டன் இந்தியா பத்திரிக்கை.

Recommended Video

Dravid beat Sachin Tendulkar in Wisden India online poll.

இணையத்தில் நடந்த இந்த கருத்துக் கணிப்பில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் இடையே இறுதிக் கட்ட போட்டி நடந்தது.

அதில் சச்சினை வீழ்த்தி ராகுல் டிராவிட் மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் ஆனது என்னை சிறப்பாக விளையாட வைத்தது... கே.எல் ராகுல் சஸ்பெண்ட் ஆனது என்னை சிறப்பாக விளையாட வைத்தது... கே.எல் ராகுல்

ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை தேர்வு எடுத்தால் அதில் ராகுல் டிராவிட் பெயரை சேர்க்காமல் இருக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என கிரிக்கெட் உலகிற்கு பாடம் நடத்தியவர் அவர்.

ஆதிக்கம் செலுத்திய டிராவிட்

ஆதிக்கம் செலுத்திய டிராவிட்

சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், கங்குலி, சேவாக் என டெஸ்ட் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் ரன் குவித்து சாதனை செய்து வந்த அதே நேரத்தில் தான் ராகுல் டிராவிடும் ஆதிக்கம் செலுத்தினார். அது அத்தனை எளிதான காரியம் அல்ல.

ரசிகர்கள் ஓட்டு

ரசிகர்கள் ஓட்டு

இந்த நிலையில், விஸ்டன் இந்தியா பத்திரிக்கை மிகச் சிறந்த இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யும் பணியை ரசிகர்கள் வசமே விட்டது. முதலில் 16 பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை குழுவாக பிரித்து ரசிகர்கள் இணையத்தில் ஓட்டு போட்டனர்.

கடைசி நால்வர்

கடைசி நால்வர்

குண்டப்பா விஸ்வநாத், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்தர் சேவாக், விராட் கோலி, புஜாரா ஆகிய எட்டு வீரர்கள் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். சச்சின், டிராவிட், விராட் கோலி, சுனில் கவாஸ்கர் கடைசி நான்கு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட்

சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட்

அதில் டிராவிட், சுனில் கவாஸ்கரையும், சச்சின், விராட் கோலியையும் முந்தினர். சச்சின் டெண்டுல்கர் - ராகுல் டிராவிட் இடையே இறுதிச் சுற்று போட்டி நடந்தது. இருவருமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் தான். இருவருமே டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.

திறமை

திறமை

சச்சின் சிறந்த ஸ்ட்ரோக் ஆட்டக்காரர். தேர்ந்த ஷாட்களால் ரன் குவிப்பார். எத்தகைய பந்துவீச்சாளராக இருந்தாலும் காத்திருந்து நேரம் பார்த்து ரன் குவிப்பார். ராகுல் டிராவிட் நிதான ஆட்டக்காரர். பந்துவீச்சாளர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து ரன் குவிப்பார். இருவருமே தங்கள் யுக்திகளால் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்கள் தான்.

52 சதவீதம்

52 சதவீதம்

விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பின் இறுதிச் சுற்றில் 11,400 பேர் பங்கேற்றனர். இதன் முடிவில் டிராவிட் 52 சதவீத ஓட்டுக்களை பெற்று முதல் இடம் பெற்றார் ராகுல் டிரவிட். சச்சின் டெண்டுல்கருக்கு 48 சதவீத ஓட்டுக்கள் விழுந்தன.

Story first published: Thursday, June 25, 2020, 11:15 [IST]
Other articles published on Jun 25, 2020
English summary
Rahul Dravid beat Sachin Tendulkar as greatest Indian test batsmen in Wisden India online poll. Rahul Dravid got 52 percent votes in the poll.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X