For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். போட்டியில் முக்கிய வீரர் நீக்கம் இந்திய ப்ளேயிங் 11ல் டிராவிட் போட்ட பக்கா ஸ்கெட்ச் இப்படி ஒரு திட்டமா?

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ப்ளேயிங் 11ல் ராகுல் டிராவிட் பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகள் மோதும் இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் வரும் அக்டோபர் 23ம் தேதியன்று நடைபெறுகிறது.

“அட இதுதான்பா வெற்றியை தீர்மானிக்கும்”.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. வக்கார் யூனிஸ் கூறிய டிப்ஸ்! “அட இதுதான்பா வெற்றியை தீர்மானிக்கும்”.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. வக்கார் யூனிஸ் கூறிய டிப்ஸ்!

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 முழுவதுமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. பேட்டிங்கை பொறுத்தவரையில் பயிற்சிப்போட்டியில் விளையாடிய வீரர்களே அதே வரிசையில் களமிறங்குகின்றனர். பெரும் குழப்பமாக இருந்த தினேஷ் கார்த்திக் vs ரிஷப் பண்ட் பிரச்சினையில் தினேஷ் கார்த்திக் தான் வெற்றி பெற்றுள்ளார்.

பந்துவீச்சு திட்டம்

பந்துவீச்சு திட்டம்

இந்நிலையில் பேட்டிங்கை போலவே பந்துவீச்சிலும் அட்டகாசமான திட்டத்தை வகுத்துள்ளார் ராகுல் டிராவிட். இந்திய ப்ளேயிங் 11ல் இருந்து முன்னணி சுழற்பந்துவீச்சாளரான யுவேந்திர சாஹல் நீக்கப்பட்டுள்ளார். அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளனர். இவர்களை தேர்வு செய்வதற்கு பின்னால் முக்கிய திட்டம் இருக்கிறது.

அக்‌ஷர் பேட்டிங்

அக்‌ஷர் பேட்டிங்

இந்திய அணிக்கு ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவைப்படுகிறார். அந்தவகையில் அக்‌ஷர் பட்டேல் சுழற்பந்துவீச்சிலும் நன்றாக செயல்படுகிறார். பேட்டிங்கிலும் அவர் உதவுகிறார். இதனால் டாப் ஆர்டரில் வெகு விரைவாக விக்கெட்கள் விழுந்துவிட்டால் அக்‌ஷர் பட்டேலால் அங்கு விளையாட முடியும்.

இடதுகை பேட்ஸ்மேன்

இடதுகை பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக செயல்படக்கூடியவர். எனவே அவரை கொண்டு வந்தால் அச்சுறுத்தும் அவர்களை சுலபமாக வீழ்த்த முடியும் என்பதால் டிராவிட் அவரை கொண்டு வருகிறார்.

Story first published: Friday, October 21, 2022, 23:09 [IST]
Other articles published on Oct 21, 2022
English summary
Indian team Coach Rahul dravid did a master plan in team india playing 11 against pakistan in t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X