For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் திட்டம் முழுவதும் நாசம்.. பும்ராவின் முடிவால் எல்லாம் தலைகீழானது.. இலங்கை தொடரில் சிக்கல்!

கவுகாத்தி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் போட்ட திட்டம் தொடக்கத்திலேயே சொதப்பலை சந்தித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி கவுகாத்தியில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்ற இந்திய அணியும், டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

 சிக்சர் சென்ற பந்து.. கடைசியில் பாய்ந்து கேட்ச் பிடித்த ராகுல் திரிபாதி.. அதிர்ச்சியில் பேட்ஸ்மேன் சிக்சர் சென்ற பந்து.. கடைசியில் பாய்ந்து கேட்ச் பிடித்த ராகுல் திரிபாதி.. அதிர்ச்சியில் பேட்ஸ்மேன்

 பும்ராவின் விலகல்

பும்ராவின் விலகல்

இந்த சூழலில் தான் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா. காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார் எனக்கூறப்பட்ட சூழலில் அவர் இலங்கை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, பும்ராவை அவசரப்படுத்தி விளையாட வைத்தால் காயத்தின் தன்மை பெரிதாகலாம். எனவே இன்னும் ஓய்வு கொடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

 டிராவிட் சொதப்பல்

டிராவிட் சொதப்பல்

இந்நிலையில் இந்த அறிவிப்பால் ராகுல் டிராவிட்டின் ஒட்டுமொத்த திட்டமும் நாசமாகியுள்ளது. இலங்கை தொடரை வைத்து டிராவிட் தனது புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார். அதாவது 2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து ஹர்திக் தலைமையில் ஒரு அணியும், 2023ம் ஆண்டு உலகக்கோப்பையை வைத்து ரோகித் தலைமையில் ஒரு அணியையும் தனித்தனியாக களமிறக்கினார். அதன்படி டி20 தொடர் நினைத்ததை போலவே நடந்துவிட்டது. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக அனைத்து சீனியர் வீரர்களையும் கொண்டு வந்து வைத்து தயார் நிலையில் உள்ளார்.

சீனியர்களின் வருகை

சீனியர்களின் வருகை

50 ஓவர் உலகக்கோப்பைக்காக 20 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டது. அதன்படி விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஓய்வில் இருந்து வந்தனர். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி போன்ற வீரர்கள் ஓய்வில் இருந்து கம்பேக் கொடுத்தனர். இதனால் ஆண்டின் முதல் தொடரையே முழு பலத்துடன் களமிறக்க திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில் தான் முக்கிய பவுலர் பும்ரா விலகி குழப்பத்தை உண்டாக்கியுள்ளார்.

ஜடேஜாவின் நிலைமை

ஜடேஜாவின் நிலைமை

ஏற்கனவே முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை. கடந்த ஆசிய கோப்பையின் போது காயம் ஏற்பட்டதால் விலகிய அவர், இன்னும் உடற்தகுதி பெறவில்லை என தெரிகிறது. நேரடியாக நியூசிலாந்து தொடருக்கு வருவார் என தெரிகிறது. உலகக்கோப்பைக்கு இன்னும் சிறிது காலமே உள்ள சூழலில் இதுபோன்ற விஷயங்கள் பின்னடைவை கொடுத்துள்ளது.

Story first published: Monday, January 9, 2023, 17:18 [IST]
Other articles published on Jan 9, 2023
English summary
Team India head coach Rahul dravid's World cup plan collapsed after Bumrah's decision on IND vs SL ODI Series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X