For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SRH VS RR:கடைசி 3 ஓவர்கள்... 59 ரன்கள்... சன் ரைசர்சை துவைத்து காய போட்ட ராஜஸ்தான்

ஹைதராபாத்:சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 59 ரன்களை விளாசி இருக்கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டியில் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பி உள்ளார்.

ராஜஸ்தான் அணி துவக்க வீரர்களாக ரகானேவும், பட்லரும் களம் இறங்கினர். ரகானே தொடக்கத்தில் நிதானமாக ஆட... ரஷித் கான் ஓவரில் போல்டாகி வெளியேறி, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பட்லர்.

SRH VS RR: 55 பந்துகளில் 102.. சன் ரைஸர்சை புரட்டி எடுத்த சாம்சன்... ஐபிஎல் தொடரின் முதல் சதம் SRH VS RR: 55 பந்துகளில் 102.. சன் ரைஸர்சை புரட்டி எடுத்த சாம்சன்... ஐபிஎல் தொடரின் முதல் சதம்

சாம்சன் பேட்டிங்

சாம்சன் பேட்டிங்

2வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் சஞ்சு சாம்சன் கை கோர்த்தார். அணிக்கு நிதானமாக ரன்கள் வந்து சேர்ந்தன. இந்த இருவரையும் பிரிக்க முயன்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சோர்ந்து போயினர். இருவரும் அரை சதம் கடந்தனர்.

சூப்பர் சாம்சன்

சூப்பர் சாம்சன்

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து அபாரமாக ஆடினர். அணியின் ஸ்கோர் 134 ரன்களாக இருந்த போது 70 ரன்கள் ரகானே ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து வந்தார் ஸ்டோக்ஸ்.

பறந்த பந்துகள்

பறந்த பந்துகள்

ஆனால் மறுமுனையிலோ... சாம்சன் சூறாவளியாக மாறி, பந்துகளை அடித்து துவம்சம் செய்தார்.. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே வெளியேற அந்த பொறுப்பை ஏற்று சதமடித்தார். இறுதிகட்ட ஓவர்களில் பந்துகள் பறந்தன.

3 ஓவர்கள், 59 ரன்கள்

3 ஓவர்கள், 59 ரன்கள்

கடைசி 3 ஓவர்களில் யாரும் நினைத்து பார்க்கமுடியாதபடி ரன்களை குவித்தது ராஜஸ்தான் அணி. மொத்தம் 59 ரன்கள் அந்த அணிக்கு கடைசி 3 ஓவர்களில் கிடைத்தன. இதுவே அந்த அணிக்கு 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

Story first published: Friday, March 29, 2019, 23:05 [IST]
Other articles published on Mar 29, 2019
English summary
Rajasthan royals scored runs 59 runs in last 3 overs against sun risers hydrabad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X