For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொண்டு அறக்கட்டளை தொடங்கினார் ஆப்கான் வீரர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வீரர் ரஷீத் கான் தனது பெயரில் ஒரு தொண்டு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இது ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை அளிப்பதற்காக துவங்கப்பட்டது.

இதுகுறித்து ரஷீத் கான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, என்னால் பெரிய விஷயங்களை செய்ய முடியாது. ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் உண்மையான அன்புடனும் உத்வேகத்துடனும் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

rashid khan launches charity foundation


இந்த அறக்கட்டளை ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி,தரமான குடிநீர் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவி செய்யும். அகதிகளுக்கு தேவையான உதவிகளை செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
rashid khan launches charity foundation


19 வயதே ஆன ரஷீத் கான் ஐசிசி தரவரிசையில் டி20 பந்துவீச்சாளர் வரிசையில் முதல் இடமும், ஒருநாள் தரவரிசையில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போரினால், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து சர்வதேச அளவில் பெயர் பெற்ற ஒரு வீரன் தனது நாட்டின் குழந்தைகள் நலனுக்காக துவங்கியுள்ள இந்த அறக்கட்டளை ஆப்கான் குழந்தைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை விதைக்கும் என்பதில் சந்தேகமில்லை.






Story first published: Monday, August 13, 2018, 11:14 [IST]
Other articles published on Aug 13, 2018
English summary
Rashid khan launches charity foundation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X