For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி ஆசிய கோப்பையில் ஆடாததற்கு மனச்சோர்வு தான் காரணம்.. குண்டு வீசும் ரவி சாஸ்திரி

மும்பை : ரவி சாஸ்திரி சமீப காலமாக கன்னாபின்னா என பேசி வருகிறார். அவர் பேசுவதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்பது போல உள்ளது.

அந்த வகையில், ஆசிய கோப்பையில் கோலி ஓய்வு பெற்றது பற்றி ஒரு தகவல் கூறியுள்ளார். கோலி எடுத்த ஓய்வு உடல் சோர்வில் இருந்து மீண்டு வருவதற்கு இல்லை, மன சோர்வில் இருந்து மீண்டு வருவதற்கு என கூறி இருக்கிறார்.

ரவி சாஸ்திரி தற்போது கூறி இருப்பது தேர்வாளர்கள் சொன்ன காரணத்துக்கு மாறாக உள்ளதால், மீண்டும் ரவி சாஸ்திரி உளறுகிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஆசிய கோப்பையில் கோலி ஏன் ஓய்வில் இருக்கிறார் என கேள்விகள் எழுந்த போது, தேர்வாளர்கள், "தொடர்ந்து கிரிக்கெட் ஆடும் வீரர்களின் உடற்தகுதியை காக்கும் வகையில், இனி சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும்" என கூறினர்.

அக்கறை இருக்கா?

அக்கறை இருக்கா?

வீரர்கள் உடல் நலனில் பிசிசிஐ-க்கு அக்கறை இருக்கிறதா என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். அந்த அளவிற்கு வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார்கள். அதற்கு ஐபிஎல் தொடரும் ஒரு காரணம். தன் மீதுள்ள கறையை போக்க பிசிசிஐ எடுத்துள்ள நடவடிக்கை தான் இந்த சுழற்சி முறை ஓய்வு என ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையான அக்கறையா?

உண்மையான அக்கறையா?

பிசிசிஐ அக்கறை இருப்பதாக காட்ட முயல்கிறதே ஒழிய வீரர்கள் மேல் உண்மையான அக்கறை இருப்பதாக தெரியவில்லை. காரணம், இந்த சுழற்சி முறை ஓய்வு முடிவு எடுக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரை அறிவித்தது பிசிசிஐ. ஆசிய கோப்பைக்கு அடுத்து ஒரு மாதம் கழித்து ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய அணிக்கு மேலும் வேலைப்பளு சேர்க்கும் வகையில் அமைந்தது வெஸ்ட் இண்டீஸ் தொடர்.

புவனேஸ்வருக்கு சோர்வா?

புவனேஸ்வருக்கு சோர்வா?

இந்த நிலையில், இதெல்லாம் ரவி சாஸ்திரிக்கு தெரியாமலா இருக்கும்? அவரும் தன் பங்குக்கு ஏதோ சொல்ல வேண்டுமே என சொல்லி உள்ளார். அடுத்து பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ரவி சாஸ்திரி அதே காரணம் தான் கூறுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், புவனேஸ்வர் குமார் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. ஆசிய கோப்பை தொடரில் மட்டுமே ஆடியுள்ளார். அவருக்கு மன சோர்வாம். அடபோங்கப்பா...

Story first published: Tuesday, October 2, 2018, 15:39 [IST]
Other articles published on Oct 2, 2018
English summary
Ravi Shastri explained why kohli was rested for Asia cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X