For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி அணியில் இருப்பார்.. ஆனால் விக்கெட் கீப்பர் வேறு ஒருவர்.. தோனியை “லாக்” செய்யும் பிசிசிஐ!!

Recommended Video

Dhoni Retirement : தோனிக்கு வழியனுப்ப நாள் குறித்த பிசிசிஐ?

மும்பை : தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா? என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

தோனி அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்பாரா என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் அப்படி ஓய்வு பெறாவிட்டாலும், இந்திய அணியில் அவர் சேர்க்கப்படுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது.

இந்த நிலையில், தோனிக்கும், பிசிசிஐக்கும் ஏற்ற அதிரடி திட்டம் ஒன்றை பிசிசிஐ வகுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தோனி ஓய்வு பெறுவாரா?

தோனி ஓய்வு பெறுவாரா?

2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என கடந்த ஆண்டு முதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. எனினும், உலகக்கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியுடன் தோற்று வெளியேறிய போது, தோனி ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்குமா?

அதனால், தோனி தொடர்ந்து கிரிக்கெட் ஆடப் போகிறார் என பலரும் கருதி வருகின்றனர். இதில் தோனியின் ஓய்வு முடிவை தாண்டி, பிசிசிஐ தோனியை அணியில் வைத்துக் கொள்ள விரும்புமா என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி, பிசிசிஐ-யின் அதிரடி திட்டம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இனி ரிஷப் பண்ட் தான்!

இனி ரிஷப் பண்ட் தான்!

தோனி இனி இந்திய அணியின் முதல் விருப்ப விக்கெட் கீப்பராக இருக்க மாட்டார். ரிஷப் பண்ட் தான் இனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர். அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி பங்கேற்க மாட்டார். இளம் வீரர் ரிஷப் பண்ட்டுக்கு அந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

தோனி உதவுவார்

தோனி உதவுவார்

அதே நேரத்தில், ரிஷப் பண்ட் முழு விக்கெட் கீப்பராக தயாராக தோனி உதவி செய்வார். அதாவது, தோனி அணியில் இருப்பார். ஆனால், அனைத்து போட்டிகளிலும் களமிறங்க மாட்டார். அணிக்கு வழிகாட்டும் நபராக இருப்பார்.

ஒரு வருடம் உள்ளது

ஒரு வருடம் உள்ளது

ரிஷப் பண்ட் இப்போது இளம் வீரர் என்றாலும், 2020ஆம் ஆண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் போது அவர் 23 வயதை எட்டி இருப்பார். அதற்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. அதற்குள் அவர் முழுமையான விக்கெட் கீப்பராக தயாராகி விடுவார். இது தான் பிசிசிஐயின் திட்டம். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

Story first published: Wednesday, July 17, 2019, 10:30 [IST]
Other articles published on Jul 17, 2019
English summary
Rishabh Pant will be first choice Wicket keeper, Dhoni will guide him, says BCCI sources
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X