For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. இதுக்கா டி20 பார்க்குறோம்? ரசிகர்கள் எரிச்சல்!

Recommended Video

IPL 2019: Kolkata vs Rajasthan | அரைசதம் அடித்து அணியைக் கவிழ்க்கும் பேட்ஸ்மேன்கள்.. வீடியோ

ஜெய்ப்பூர் : 2௦19 ஐபிஎல் தொடரின் 21வது போட்டியில் ராஜஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்து 3 விக்கெட்கள் மட்டுமே இழந்த நிலையில் வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. கையில் விக்கெட்கள் இருந்தும் ராஜஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் கடைசி ஓவர்களில் ரன் குவிக்கத் திணறினர்.

தம்பி... விஜய் சங்கர்...! மனசில என்ன ரிஷப் பன்ட் என்று நினைப்பா? சொன்ன அந்த முன்னாள் வீரர் தம்பி... விஜய் சங்கர்...! மனசில என்ன ரிஷப் பன்ட் என்று நினைப்பா? சொன்ன அந்த முன்னாள் வீரர்

ஜோஸ் பட்லர் தடுமாற்றம்

ஜோஸ் பட்லர் தடுமாற்றம்

துவக்க வீரர் ஜோஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களில் தட்டுத் தடுமாறி பேட்டிங் செய்தார். பட்லர் 34 பந்துகளில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 2வது ஓவரில் இருந்து 20வது ஓவர் வரை களத்தில் இருந்தார். அவர் துவக்கத்திலும் நிதானமாக ஆடி விட்டு, கடைசி நேரத்திலும் அதிரடியாக ஆட முடியாமல் தவித்தார்.

பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றம்

பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றம்

ஸ்மித் அரைசதம் கடந்து 59 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடி காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் 14 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து பெரும் அதிர்ச்சி அளித்தார்.

நிதானம்

நிதானம்

கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் என்ன சிறப்பாக பந்துவீசி இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த அதிரடி வீரர்கள் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்றோர் நிதானம் காட்டியது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

பஞ்சாப் சொதப்பல்

பஞ்சாப் சொதப்பல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் ராகுல், சர்ப்ராஸ் கான் அரைசதம் அடித்து நீண்ட நேரம் களத்தில் இருத்தும் அதிரடியாக ஆடாமல், தங்கள் அணியை தோல்வி அடையச் செய்தனர்.

பிட்ச்சில் தவறு இல்லை

பிட்ச்சில் தவறு இல்லை

அதே போன்று ஸ்டீவ் ஸ்மித், பட்லர், பென் ஸ்டோக்ஸ் நிதான பேட்டிங் செய்தே ராஜஸ்தான் அணியை தோல்வி அடையச் செய்துள்ளனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் கொல்கத்தா அணி 14 ஓவர்களில் வெற்றி இலக்கான 140 ரன்களை தாண்டியது. அப்படி என்றால், பிட்ச்சில் எந்த தவறும் இல்லை.

ரசிகர்கள் எரிச்சல்

ரசிகர்கள் எரிச்சல்

2019 ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், ராகுல், சர்ப்ராஸ் கான் போன்ற பேட்ஸ்மேன்கள் நிதானமாக பேட்டிங் செய்து, அரைசதம் அடித்து தங்கள் அணியை கவிழ்த்து வரும் போக்கை கண்டு, "எதுக்கு டி20 மேட்ச் பார்க்குறோம்னே தெரியலையே?" என ரசிகர்கள் எரிச்சலடைந்து உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் துவக்கம் முதல் கடைசி வரை அதிரடியாக ஆடி வரும் ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே. அதனால் இந்த சீசனில் அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதும் உண்மை.

Story first published: Monday, April 8, 2019, 11:09 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
RR vs KKR : Buttler, Smith and Ben Stokes struggle to score big against KKR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X