ருதுராஜ் கெயிக்வாட்-க்கு என்ன ஆனது? நியூசி, தொடரில் இருந்து திடீர் விலகல்..மேலும் 2 பேருக்கு சிக்கல்

மும்பை: நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து பல வீரர்கள் விலகியுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் வெற்றி கண்டு இந்தியா தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் 3வது போட்டி இந்தூரில் நடைபெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 27, 29 மற்றும் ஃபிப்ரவரி 1ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ருதுராஜ் முதல் ஷிவம் மாவி வரை.. இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி.. முற்றிலும் எதிர்கால படை! ருதுராஜ் முதல் ஷிவம் மாவி வரை.. இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி.. முற்றிலும் எதிர்கால படை!

டி20 கிரிக்கெட் தொடர்

டி20 கிரிக்கெட் தொடர்

இந்த முறையும் இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் சேர்க்கப்படவில்லை. ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் மீண்டும் இளம் படை களமிறங்கவுள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் ருதுராஜ் கெயிக்வாட் விலகியுள்ளார்.

 என்ன காயம்

என்ன காயம்

ருதுராஜ் கெயிக்வாட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குணமாக சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதாலும் முழுவதுமாக விலகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள என்.சி.ஏ அதிகாரிகள், ருதுராஜுக்கு ஸ்கேன்கள் எடுக்கவுள்ளோம். அதற்கேற்றார் போல அவரின் தேர்வு இருக்கும் எனக்கூறியுள்ளனர்.

3வது வீரர் காயம்

3வது வீரர் காயம்

ருதுராஜ் கெயிக்வாட்டை போலவே நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் பெங்களூருவில் தான் உள்ளனர். மிகவும் குறைவான வாய்ப்புகளை பெற்று வரும் இவர்கள், இப்படி காயம் எனக்கூறி விலகுவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 மாற்று வீரர் யார்?

மாற்று வீரர் யார்?

எனினும் ருதுராஜுக்கு இந்த தொடரில் மாற்று வீரர் அறிவிக்கப்படாது எனத்தெரிகிறது. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கனவே பிரித்வி ஷா, இஷான் கிஷான், சுப்மன் கில், தீபக் ஹூடா என 4 ஓப்பனிங் வீரர்கள் இருக்கின்றனர். எனவே கெயிக்வாட்டிற்கு மாற்றாக ஒரு பவுலரை சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Young Opener Ruturaj gaikwad Ruled out of India vs New Zealand T20 series, here is the reason behind it
Story first published: Tuesday, January 24, 2023, 21:13 [IST]
Other articles published on Jan 24, 2023
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X