For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவரையெல்லாம் எதுக்குங்க டீம்ல சேர்த்தீங்க” வங்கதேசத்துடனான ஒருநாள் தொடர்.. சாபா கரீம் கடும் விளாசல்

டாக்கா: வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குறிப்பிட்ட 2 வீரர்களை அணிக்குள் சேர்த்தது எதற்காக என முன்னாள் வீரர் சாபா கரீம் சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளார்.

வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் துரதிஷ்டவமாக தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என ஏற்கனவே இழந்தது.

நியூசிலாந்துடனான தொடரில் தோல்வியடைந்த இந்திய அணி, வங்கதேச அணியுடனான தொடரில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்த்த சூழலில் மீண்டும் ஏமாற்றத்துடன் ரசிகர்கள் உள்ளனர்.

“இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்! “இந்தியாவால் என்னங்க செய்ய முடியும்??”.. வம்பிற்கு இழுத்த வங்கதேச அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

வங்கதேச தொடர்

வங்கதேச தொடர்

இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உள்ள போதும், அனைத்து முக்கிய வீரர்களும் இடம்பெறவில்லை. உதாரணத்திற்கு ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பும்ரா, ஜடேஜா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் என 11ல் 3 - 4 வீரர்கள் மட்டுமே வழக்கமாக வரும் வீரர்கள் ஆகும். மற்ற அனைவரும் அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் ஆகும்.

2 புதிய வீரர்கள்

2 புதிய வீரர்கள்

இதில் அனைவருக்கும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ராஜட் பட்டிதார் மற்றும் ராகுல் திரிபாதி ஆகியோர் சேர்க்கப்பட்டது தான். இஷான் கிஷான், சுப்மன் கில், சஞ்சு ஆகியோரெல்லாம் இருக்கையில் திடீரென அவர்கள் இரண்டு பேரையும் அணிக்குள் கொண்டு வந்ததிருந்தனர். அவர்களை பயன்படுத்தவும் இல்லை.

சபா கரீம் பேச்சு

சபா கரீம் பேச்சு

இந்நிலையில் தேர்வுக்குழுவின் முடிவு குறித்து சாபா கரீம் விளாசியுள்ளார். அதில், எதற்காக ராஜட் பட்டிதார் மற்றும் ராகுல் திரிபாதியை வங்கதேசம் அழைத்துச் சென்றீர்கள். திரிபாதி 50 ஓவர் கிரிக்கெட்டில் அப்படி என்ன செய்துவிட்டார்?.. அவர் ஒரு டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர் ஆகும். ஆனால் அவரை 50 ஓவருக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். அவர் விளையாடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை.

ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு

ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு

தேர்வுக்குழு அதிகாரிகள் முதலில் இந்தியாவின் முதற்கட்ட அணி எது? என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை சுற்றி மற்ற வீரர்களை உள்ளே கொண்டு வர முடியும். இப்படி பணிகளை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடாது என்பது போல சாபா கரீம் பேசியுள்ளார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரில் யாருக்கேனும் ஒருவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, December 8, 2022, 16:34 [IST]
Other articles published on Dec 8, 2022
English summary
Former Indian cricketer Saba karim raised a question over 2 Important selections in India vs bangladesh ODI series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X