ஒரு கான்ஸ்டபிள் கூட கிடையாது.. சச்சினுக்கு பாதுகாப்பு ரத்து.. மகாராஷ்டிர மாநில அரசு அதிரடி முடிவு!

மும்பை : முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பை மாற்றி அமைத்துள்ளது புதிய அரசு.

சச்சின் பாதுகாப்பு நீக்கம்

சச்சின் பாதுகாப்பு நீக்கம்

அதன்படி, இதுவரை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அதே போல, சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும், சிலருக்கு குறைக்கப்பட்டும் உள்ளது.

முக்கிய நபர்

முக்கிய நபர்

முன்னாள் இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் இந்தியாவின் முக்கியமான நபராகவே இருக்கிறார். அவரது பாதுகாப்புக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.

“எக்ஸ்”பிரிவு பாதுகாப்பு

“எக்ஸ்”பிரிவு பாதுகாப்பு

இதை கருத்தில் கொண்டே முன்பு சச்சினுக்கு "எக்ஸ்" பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதன் படி, சச்சினுக்கு பாதுகாப்புக்கு ஒரு கான்ஸ்டபிள் 24 மணி நேரமும் உடன் இருப்பார். அது இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் புகைச்சல்

ரசிகர்கள் புகைச்சல்

எனினும், சச்சின் வெளியே செல்லும் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது சச்சின் ரசிகர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளது எனவும் சிலர் புகார் கூறி உள்ளனர்.

ஆதித்யா தாக்கரே

ஆதித்யா தாக்கரே

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, "இசட்" பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னா ஹசாரே பாதுகாப்பு

அன்னா ஹசாரே பாதுகாப்பு

சமூக ஆர்வலரும், பல போராட்டங்களை நடத்தி தாக்கத்தை ஏற்படுத்தியவருமான அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு "இசட்" பிரிவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 45 முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Sachin Tendulkar’s X category security withdrawn by Mumbai Police
Story first published: Wednesday, December 25, 2019, 16:08 [IST]
Other articles published on Dec 25, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X