For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சத்தியமா தூங்கவே இல்லைங்க” ஐபிஎல் வரலாற்றில் படைக்கப்பட்ட புது வரலாறு.. சாம் கரண் நெகிழ்ச்சி பேச்சு

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதால் இனி தூக்கம் கூட வராது என்பது போல இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் மனம் திறந்துள்ளார்.

16வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் படு சுவாரஸ்யத்துடன் நடந்து முடிந்தது. ஆரம்பமே அமர்க்களம் என்பது போல ஐதராபாத், பஞ்சாப் அணிகள் சரவெடியாக வீரர்களை ஏலம் கேட்டு அசத்தினர்.

இந்த மினி ஏலத்தின் நாயகன் யார் என்று பார்த்தால் நமது சுட்டிக்குழந்தை சாம் கரணை கூறலாம். அவர் அதிக தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படி ஒரு உச்சமா எனும் அளவிற்கு பஞ்சாப் வாயடைக்க செய்துவிட்டது.

ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலை கொடுத்து ஏமாந்த அணி.. இவருக்கு எல்லாம் இவ்வளவு தேவையா? ஐபிஎல் மினி ஏலம் - அதிக விலை கொடுத்து ஏமாந்த அணி.. இவருக்கு எல்லாம் இவ்வளவு தேவையா?

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம்

டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கிய சாம் கரண், தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனையடுத்து பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் யுத்தம் நடைபெற, இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

பழைய சாதனை

பழைய சாதனை

கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது சாம் கரணுடன் சேர்த்து, கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸும் புதிய ரெக்கார்ட்-ஐ பதிவு செய்தனர். கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பையும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணியும் வாங்கியது.

சாம் கரண் ஓபன் டாக்

சாம் கரண் ஓபன் டாக்

இந்நிலையில் இந்த மகிழ்ச்சி தருணம் குறித்து சாம் கரண் பேசியுள்ளார். அதில், நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் நான் எந்த அணிக்கு செல்லப்போகிறேன், என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றத்திலேயே இருந்தேன். எனினும் எனது செயல்பாடுக்கான அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு தொகை வரும் என எதிர்பார்க்கவே இல்லை.

மீண்டும் அதே அணி

மீண்டும் அதே அணி

சாம் கரண் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கியது பஞ்சாப் அணியில் இருந்து தான். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எங்கு தொடங்கியதோ, அங்கு மீண்டும் சென்றது ஆச்சரியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அங்கு எனது சக வீரர்கள் ஜானி பேரிஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளேன் என சாம் கரண் பேசியுள்ளார்.

Story first published: Saturday, December 24, 2022, 11:59 [IST]
Other articles published on Dec 24, 2022
English summary
England all rounder Sam curran opens up about his New record bidding in IPL 2023 mini auction
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X