For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க பார்ப்போம்.. இந்திய அணிக்கு சவால் விட்ட இளம் வீரர்!

மும்பை : இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பெற்று போட்டிகளில் களமிறங்கி ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் சஞ்சு சாம்சன்.

அதனால், சர்வதேச அளவில் தன்னை நிரூபித்து அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாத சூழ்நிலை அவருக்கு உள்ளது.

எனினும், அணியில் தன்னை நீக்க முடியாதபடி உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து மிரட்டி வருகிறார். கடந்த 11 இன்னிங்க்ஸ்களில் ஒரு இரட்டை சதம், ஒரு சதம், இரண்டு அரைசதம் என அடித்து பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

சஞ்சு சாம்சன் வாய்ப்பு

சஞ்சு சாம்சன் வாய்ப்பு

சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் பங்கேற்றார். அதன் பின் அவருக்கு நான்கு ஆண்டுகள் கழித்து வங்கதேச டி20 தொடரில் தான் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு

ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு

இந்திய உத்தேச அணியில் மாற்று வீரராக இடம் பெற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சன், அந்த தொடரில் போட்டிகளில் விளையாடவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டுக்கு அதிக ஆதரவு இருந்ததால் அவரே போட்டிகளில் பங்கேற்றார்.

வெளியே அமர்ந்த சாம்சன்

வெளியே அமர்ந்த சாம்சன்

அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் அந்த தொடரிலும் வெளியே தான் அமர்ந்தார். ஒரு போட்டியில் கூட அவர் பங்கேற்கவில்லை. ரிஷப் பண்ட் அந்த தொடரிலும் விக்கெட் கீப்பராக தொடர்ந்து ஆடினார்.

முன்னேறும் பண்ட்

முன்னேறும் பண்ட்

பேட்டிங்கில் மோசமாக ஆடி வந்த ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். அதே சமயம், அவரின் விக்கெட் கீப்பிங் மட்டும் இன்னும் மோசமான நிலையில் தான் உள்ளது.

அணியில் இடம் கிடைக்குமா?

அணியில் இடம் கிடைக்குமா?

பண்ட் பேட்டிங்கில் முன்னேறி வருவதால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். அடுத்து வரும் தொடர்களில் அவர் மாற்று வீரராகக் கூட தன் இடத்தை இழக்க வாய்ப்பு உள்ளது.

சஞ்சு சாம்சன் அதிரடி

சஞ்சு சாம்சன் அதிரடி

எனினும், தன்னை அணியில் இருந்து நீக்க எந்த காரணத்தையும் அளிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தன் முத்திரையை பதித்து வருகிறார் அவர்.

ரஞ்சி ட்ராபி ஆட்டம்

ரஞ்சி ட்ராபி ஆட்டம்

தற்போது நடந்து வரும் ரஞ்சி ட்ராபி தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார் சஞ்சு சாம்சன். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 116 ரன்கள் குவித்தார்.

அதிக ரன்கள் குவித்தார்

அதிக ரன்கள் குவித்தார்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கேரளா தோல்வி அடைந்தாலும், அந்தப் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர் சஞ்சு சாம்சன் தான். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் 82 பந்துகளில் 78 ரன்கள் குவித்து இருந்தார் அவர்.

எளிதில் நீக்க முடியாது

எளிதில் நீக்க முடியாது

இப்படி தொடர்ந்து ரன் குவிக்கும் நிலையில், சஞ்சு சாம்சனை அத்தனை எளிதில் அணியை விட்டு நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அவரை நீக்கினால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் அவரை ஏன் நீக்கம் செய்தோம்? என பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தேர்வுக் குழுவுக்கு ஏற்படும்.

எப்போது வாய்ப்பு கிடைக்கும்?

எப்போது வாய்ப்பு கிடைக்கும்?

அடுத்து வரும் டி20 தொடரில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர் யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ, ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டாலோ மட்டும் தான் களமிறங்கும் அணியில் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

Story first published: Friday, December 27, 2019, 17:54 [IST]
Other articles published on Dec 27, 2019
English summary
Sanju Samson challenge Indian team management after scoring big in Ranji trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X