For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் எத்தனை வாய்ப்பு தான் வீணடிப்பீங்க ? ரசிகர்களை வெறுப்பேற்றிய ஷிகர் தவான்.. பாடம் எடுத்த இஷான்

சிட்டங்காங் : வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் ரசிகர்களை ஏமாற்றினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்கியது.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா , தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால், அவர்களுக்கு பதில் இஷான் கிஷன், குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Fake Fielding விவகாரம்.. வங்கதேசத்திற்கு கிடுக்குப்பிடி போட்ட ஹர்ஷா போக்லே.. ஒரே கேள்வியால் டேமேஜ்Fake Fielding விவகாரம்.. வங்கதேசத்திற்கு கிடுக்குப்பிடி போட்ட ஹர்ஷா போக்லே.. ஒரே கேள்வியால் டேமேஜ்

ரோகித்தின் தயவு

ரோகித்தின் தயவு

ஷிகர் தவான் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரோகித் சர்மாவின் தயவால் கொண்டு வரப்பட்டார். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை இந்தியாவில் நடைபெறுவதால், ஷிகர் தவானின் அனுபவம் அணிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதே ரோகித் சர்மாவின் ஐடியா.

வீணான வாய்ப்புகள்

வீணான வாய்ப்புகள்

எனினும் தொடக்க வீரர் இடத்திற்கு அரை டஜன் கணக்கில் தொடக்க வீரர்கள் வாய்ப்புக்காக காத்து உள்ளனர். இதனால் ஷிகர் தவான், தனது திறமையை மீண்டும் நிரூபித்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். ஆனால் தவான் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 72 ரன்கள் அடித்தார்.

வெறும் 14 ரன்கள்

வெறும் 14 ரன்கள்

அதன் பிறகு, மிக பெரிய ஏமாற்றத்தை தான் ரசிகர்களுக்கு தவான் வழங்கினார். கடந்த 5 இன்னிங்சில் தவான் அடித்த ரன்கள் 3, 28,7, 8,3 ஆகிய ரன்களை மட்டும் தான் அடித்தி இருக்கிறார். அதாவது, கடந்த 5 போட்டிகளில் தவான் ஒற்றை இலக்கத்தில் 4 முறை ஆட்டமிழந்து இருக்கிறார்.

இஷான் கிஷன் அதிரடி

இஷான் கிஷன் அதிரடி

வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியில் கூட ஷிகர் தவானின் இந்த இன்னிங்ஸ்களே காரணம். வங்கதேச தொடரில் 3 போட்டிகளில் தவான் அடித்த மொத்த ரன்களே 14 ஆகும். இப்படி இருக்கும் நபரை எப்படி இளம் வீரர்களுக்கு பதிலாக உலககோப்பை தொடருக்கு அழைத்து செல்ல முடியும். இன்று ஷிகர் தவானுடன் களமிறங்கிய இஷான் கிஷன், அதிரடியாக விளையாடி, எப்படி தொடக்கத்தில் விளையாட வேண்டும் என்று பாடம் எடுத்து வருகிறார்.

Story first published: Saturday, December 10, 2022, 13:18 [IST]
Other articles published on Dec 10, 2022
English summary
Shikhar dhawan poor performance continues in odi cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X