For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட்டுக்கு புதிய "சிக்கல்".. மீண்டும் அணிக்கு திரும்பும் "மாஸ்" பிளேயர் - செம "செக்"

மும்பை: ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டுக்கு இந்த தகவல் நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.

ஆம்! 2020 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே, டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

"எல்லாமே தப்பா நடக்குது.. ஐபிஎல் கஷ்டம்".. "திடீர்" மாற்றம் - மௌனமாக "ம்ம்" கொட்டிய கங்குலி

இதனால், விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்டை கேப்டனாக நியமித்தது டெல்லி நிர்வாகம். இதனால் பலரும், டெல்லியின் அணிக்கு தலைமை ஒரு மைனஸாக இருக்க வாய்ப்புள்ளது எனும் ரீதியில் விமர்சனங்களை முன்வைக்க, சப்தமின்றி தொடரை கேப்டனாக தொடக்கினார் ரிஷப் பண்ட். முதல் போட்டியிலேயே, தனது "குரு" தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

பீஸ்ட் மோட்

பீஸ்ட் மோட்

பிறகு அடுத்தடுத்து வெற்றிகளை வசப்படுத்தியது டெல்லி அணி. கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்படும் வரை 8 போட்டிகளில் 6ல் வென்று, புள்ளிப்பட்டியலில் நம்பர்.1 இடத்தை பிடித்தது டெல்லி கேபிட்டல்ஸ். விமர்சனம் செய்தவர்கள், ஏளனம் செய்தவர்கள் என அனைவரும் சைலன்ட் மோடுக்கு செல்ல, "பீஸ்ட்" மோடில் அதிர வைத்தார் பண்ட்.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளும் வரும் செப்டம்பர் மாதம் அமீரகத்தில் தொடங்க உள்ளது. தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி வீரர்கள், டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இங்கிலாந்தில் இருந்தபடியே நேராக அமீரகம் வந்து சேர்ந்து, அங்கிருந்தே அவரவர்களின் ஐபிஎல் அணியுடன் இணைந்து கொள்வார்கள். அதன்படி. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் கேப்டனாக அணியுடன் இணைந்து கொள்ளவிருக்கிறார்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர்

இந்நிலையில் காயம் காரணமாக விலகியிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் தான் மீண்டும் டெல்லி அணியில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "என் தோள்பட்டையை குணப்படுத்தும் முறைகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக தயாராகிவிடுவேன். இதனால், நான் நிச்சயம் அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குவது உறுதி.

கேட்காமல் கேட்கும் ஷ்ரேயாஸ்

கேட்காமல் கேட்கும் ஷ்ரேயாஸ்

ஆனால், கேப்டன் பதவியைப் பற்றி எனக்குத் தெரியாது, அது அணியின் உரிமையாளர்கள் கைகளில் உள்ளது. ஆனால் அணி ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது, நாங்கள் இப்போது புள்ளிப்பட்டியலில் மேலே இருக்கிறோம், அதுதான் எனக்கு மிகவும் முக்கியமானது. டெல்லி இதற்கு முன்பு ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே, கோப்பையை ஏந்த வைப்பதே எனது ஒரே குறிக்கோள்" என்று கேப்டன் பதவியை எனக்கு மீண்டும் கொடுத்திடுங்கப்பா என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

Story first published: Monday, July 5, 2021, 18:31 [IST]
Other articles published on Jul 5, 2021
English summary
Shreyas Iyer Confirm Participation in IPL 2021 - ஐபிஎல் 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X