For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீனியர் வீரரே இப்படி செய்யலாமா.. முதல் டி20 போட்டியில் நடந்த பெரும் தவறு.. இதை கவனித்தீர்களா??

டெல்லி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு கவனம் பெற்றுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 9 ) டெல்லியில் நடைபெற்றது.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடுஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - 3 ஒருநாள், 5 டி20 போட்டி கொண்ட தொடர்.. அட்டவணை வெளியீடு

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 211 ரன்களை குவித்தது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டிக்காக் (22), தெம்பா பவுமா (10), டுவைன் பிரிட்டோரியஸ் (29) என அடுத்தடுத்து வெளியேறினர். 81 /3 என தடுமாறிய தென்னாப்பிரிக்க அணி, இலக்கை அடையும் வரை விக்கெட்டை இழக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்கள், வாண்டர் டுசன் 46 பந்துகளில் 75 ரன்களும் அடித்தனர். இவர்கள் மட்டுமே 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சீனியர் செய்த தவறு

சீனியர் செய்த தவறு

இந்நிலையில் சீனியர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு தான், இந்தியாவின் தோல்விக்கே அடித்தளம் போட்டுள்ளது. அதாவது 30 பந்துகளில் 30 ரன்களை அடித்து அவுட்டாகி இருக்க வேண்டிய ராசி வாண்டர் டுசனை சூடேற்றி, 46 பந்துகளில் 75 நாட் அவுட்டாக கொண்டு சென்றது ஸ்ரேயாஸ் ஐயர் தான்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

ஆட்டத்தின் 15வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய 2வது பந்தை வாண்டர் டுசன் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். ஸ்லோயர் பந்தாக போட்டதால் நேராக டீப் மிட் விக்கெட்டில் ஃபீல்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நோக்கி சென்றது. அழகாக வந்த அந்த கேட்ச்-ஐ பதற்றத்தால் பிடிக்க தவறினார். அந்த கேட்ச்-க்கு பிறகு தான் வாண்டர் டுசன் பெரும் பார்ட்னர்ஷிப்பை அமைத்துக்கொண்டார்.

நம்பிக்கை உடைந்ததே

நம்பிக்கை உடைந்ததே

அதிக ஸ்கோர் உள்ள போட்டிகளில் மிகவும் பதற்றமான சூழல் இருப்பது சகஜமான ஒன்று தான். புதுமுக வீரர்கள் அந்த தவறுகளை அடிக்கடி செய்வார்கள். ஆனால் நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், நம்பிக்கையின் பேரில் தான் முக்கியமான இடத்தில் ஃபீல்டிங் நிற்க வைக்கப்படுகின்றன. ஆனால் இது போன்ற தவறுகள் பெரும் நஷ்டத்தை கொடுப்பதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Story first published: Friday, June 10, 2022, 10:37 [IST]
Other articles published on Jun 10, 2022
English summary
Shreyas Iyer's Catch drop ( ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு ) தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த தவறு இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X