செம கலாய்.. நொந்து போயிருந்த கங்குலி.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய மகள்!

கொல்கத்தா : பிசிசிஐ தலைவர் கங்குலி நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டு இருக்கிறார்.

அவருக்கு இருக்கும் குறைந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என உழைத்து வருகிறார்.

இந்த நிலையில்தான் உழைத்துக் கொண்டே இருக்கும் கங்குலியை அவரது மகள் சனா கிண்டல் அடித்து இருக்கிறார்.

புகைப்படம்

புகைப்படம்

கங்குலி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதன் கீழே "ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதை வெறுக்கிறேன்" எனக் குறிப்பிட்டு நொந்து கொண்டு இருந்தார் கங்குலி.

பூங்கா

பூங்கா

அந்தப் புகைப்படத்தில் கங்குலி, பூங்கா ஒன்றில் நின்று கொண்டு இருந்தார். ஆனால், என்ன வேலை செய்கிறார் என்பதை குறிப்பிடவில்லை. அந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வந்தது.

படுத்து இருக்கிறேன்

இந்த நிலையில், அந்த புகைப்படத்தின் கீழே அவரது மகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல பதிவிட்டு தன் தந்தையை வெறுப்பேற்றினார். கங்குலி, ஒரு நாள் விடாமல் வேலை செய்து வரும் நிலையில், தான் பகல் 12 மணி வரை படுத்து இருப்பதாகக் கூறி இருந்தார் சனா.

நிறைய தூரம் போக வேண்டும்

நிறைய தூரம் போக வேண்டும்

"யார் வேலை செய்யாமல் பகல் 12 மணி வரை படுக்கையில் இருக்கிறார் என யூகிக்கவும். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும் அப்பா.." எனக் கூறி கங்குலியை கலாய்த்து இருந்தார் சனா.

இது முதல் முறையல்ல

ஏற்கனவே, வேலை செய்து நொந்து போயிருக்கும் கங்குலியை வெறுப்பேற்றி, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார் சனா. இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் இது போல செல்லமாக காலை வாரி விட்டுக் கொள்வது இது முதல் முறையல்ல.

பகல் - இரவு போட்டி

பகல் - இரவு போட்டி

பகல் - இரவு டெஸ்ட் போட்டி நடத்திய பின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கங்குலி அப்போது தன்னை ஒரு புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

கலாய்த்த சனா

கலாய்த்த சனா

அந்த புகைப்படத்தில் அவர் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு, எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்த புகைப்படத்தையும் கலாய்த்து இருந்தார் சனா.

கிண்டலடித்தார்

கிண்டலடித்தார்

அப்போது, எதையோ பிடிக்காதது போல கங்குலி முகத்தை வைத்திருப்பதாக சனா கூறி கிண்டல் செய்து இருந்தார். அதற்கு கங்குலி, சனாவை கிண்டல் செய்து திருப்பி பன்ச் வைத்தார்.

பதிலடி.

பதிலடி.

நீ மிகவும் ஒழுக்கம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் தான் இப்படி முகத்தை வைத்துள்ளேன் என கங்குலி பதில் அளிக்க, அதற்கு சனா, எல்லாம் உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொள்கிறேன் எனக் கூறி மீண்டும் பதிலடி கொடுத்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Sourav Ganguly trolled by his daughter Sana in Instagram after posting that he hate working on a Sunday.
Story first published: Monday, December 30, 2019, 12:10 [IST]
Other articles published on Dec 30, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X