For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தில்லான ஆஸ்திரேலியா.. தொடை நடுங்கும் தென் ஆப்பிரிக்கா.. கை குலுக்க மாட்டார்களாம்

மும்பை: ஆஸ்திரேலிய அணியினர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நாங்கள் பயப்படவில்லை. கை குலுக்குவதை தொடர்வோம் என்று கூறியுள்ள நிலையில் இந்தியாவுக்கு வருகை தரும் தென் ஆப்பிரிக்க அணியினர் கை குலுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பீதி உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் இப்போது இந்தியா வரைக்கும் வந்து விட்டது. விளையாட்டு உலகிலும் கூட கொரோனா பீதி ஆட்டிப்படைத்து வருகிறது.

பல அணிகளில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் அணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கை குலுக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியினரோ தொடர்ந்து கை குலுக்குவோம் என்று கூறி விட்டனர். இப்போது தென் ஆப்பிரிக்க அணியினரோ கை குலுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியினர் இந்தியாவுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

கை குலுக்கலை தவிர்ப்போம் -தெ.ஆ.

கை குலுக்கலை தவிர்ப்போம் -தெ.ஆ.

இந்த போட்டித் தொடர் குறித்தும் கொரோனா குறித்தும் அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறுகையில், வழக்கமான கை குலுக்கலை நாங்கள் தவிர்ப்போம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40ஐ தொட்டுள்ளதாக அறிகிறோம். வீரர்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே அது தொடர்பான வழி காட்டல்களை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

வேறு வகையில் மரியாதை

வேறு வகையில் மரியாதை

கை குலுக்கலை தவிர்ப்பது நல்லது என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதை கடைப்பிடிப்போம். அது ஒரு வகையில் நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். வீரர்கள் மற்றவர்களை மதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. கை குலுக்கலுக்குப் பதிலாக வேறு வகையில் எங்களது மரியாதையை காட்டுவோம் என்றும் பௌச்சர் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் மார்க் பௌச்சர்

பயிற்சியாளர் மார்க் பௌச்சர்

இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் எந்த ஆரோக்கிய குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பின்னர்தான் அணி இங்கு வந்துள்ளது. அவர்கள் சொல்படி நாங்கள் பின்பற்றுவோம். இங்கு விளையாடுவது ஆபத்து என்று இருந்தால் நிச்சயம் அவர்கள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை என்றார் பெளச்சர்.

Story first published: Monday, March 9, 2020, 17:48 [IST]
Other articles published on Mar 9, 2020
English summary
South Africa cricketers to avoid handshake during India tour after Corona scare -said Coach Mark Boucher
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X