For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மைதானத்துல நாம எப்படி ஆடுறோமோ அதை வச்சுதான் ஆட்டம் தீர்மானிக்கப்படுது... சச்சின் விளக்கம்

மும்பை : மைதானத்தில் ஒரு வீரர் எப்படி ஆடுகிறாரோ அதைவைத்து தான் அவரது விளையாட்டு தீர்மானிக்கப்படுவதாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அன்அகாடமியின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் தான் அதிகமாக அனுபவ பாடங்களை கற்றுள்ளதாகவும் அதை மாணவர்களுடன் பகிர விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

 இவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது.. அதிருப்தியில் 4 பேர்.. தோனிக்கு ஏற்பட்ட காம்பினேஷன் குழப்பம்! இவங்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுறது.. அதிருப்தியில் 4 பேர்.. தோனிக்கு ஏற்பட்ட காம்பினேஷன் குழப்பம்!

கனவுகளை தொடர்ந்து துரத்தினால் ஒரு கட்டத்தில் அது உண்மையாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அன்அகாடமி பிராண்ட் அம்பாசிடர்

அன்அகாடமி பிராண்ட் அம்பாசிடர்

முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தன்னுடைய கேரியரில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள சச்சினின் இத்தகைய சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அன்அகாடமியின் பிராண்ட் அம்பாசிடராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீர்மானிக்கும் வீரரின் விளையாட்டு

தீர்மானிக்கும் வீரரின் விளையாட்டு

இந்நிலையில் மைதானத்தில் ஒரு வீரர் எப்படி ஆடுகிறாரோ அதைவைத்து தான் அவரது விளையாட்டு தீர்மானிக்கப்படுவதாகவும் மாறாக அவரின் பின்புலத்தை வைத்து மதிப்பிடப்படுவதில்லை என்றும் சச்சின் குறிப்பிட்டார். தனிப்பட்ட நபராக இருந்தாலும் அணிக்காக விளையாடுவதே ஒவ்வொரு வீரரின் கடமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு அறிவுரை

மேலும் மாணவர்கள் தொடர்ந்து தங்களது கனவுகளை துரத்த வேண்டும் என்றும் அது ஒருநாள் உண்மையாக மாறும் என்றும் சச்சின் கூறியுள்ளார். நாம் நடக்கவே முடியாது என்று ஒருசில விஷயங்களை நினைத்தாலும் அடுத்த அடியை எடுத்து வைப்பதன்மூலம் இலக்கை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணர்களுடன் பகிர விருப்பம்

மாணர்களுடன் பகிர விருப்பம்

தான் பல இடங்களில் பல கோச்களின் மூலம் கற்ற பாடத்தை தற்போது மாணவர்களுக்கு பகிர விரும்புவதாகவும் தான் அதிகமான அனுபவ பாடங்களை கற்றுள்ளதாகவும் சச்சின் கூறியுள்ளார். மேலும் விளையாட்டு அனைவரையும் ஒருங்கிணைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 23, 2021, 15:45 [IST]
Other articles published on Feb 23, 2021
English summary
I myself learnt a lot and those are the experiences I want to share -Sachin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X