For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விளையாடுவதற்கு முன்பே இந்தியா மீது ஸ்மித் புகார்.. பயற்சி ஆட்டத்திற்கு நோ சொன்ன பின்னணி.. சரி வருமா

மும்பை : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்தியத் தொடர் முன்பு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காதது குறித்து ஏன் என்ற காரணத்தை கூறியுள்ளார்.

ஒவ்வொரு பெரிய டெஸ்ட் தொடர் முன்பும் வெளிநாட்டு அணிகள் ஆசியா வரும் போதும், ஆசிய அணிகள் வெளிநாடு செல்லும் போதும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார்கள்.

தொடருக்கு முன்பு இது போன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் தங்களை மாற்றிக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்! தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்!

இந்தியா மீது புகார்

இந்தியா மீது புகார்

இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி பெங்களூருக்கு வந்து பயிற்சி முகாமில் பங்கேற்க வருகிறது. எனினும் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் ஸ்மித் இந்தியா மீது பழி சுமத்தியுள்ளார்.

சம்பந்தமே இருக்காது

சம்பந்தமே இருக்காது

நாங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்போது எங்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் அமைக்கப்படும் ஆடுகளத்திற்கும் போட்டியில் பயன்படுத்தப்படும் ஆடுகளத்திற்கும் எவ்வித சம்பந்தமுமே இருக்காது. இப்படி தான் 2017 ஆம் ஆண்டு நாங்கள் வந்தபோது பயிற்சி ஆட்டத்தில் எங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆடுகளத்தில் புற்களை வைத்து விளையாட சொன்னார்கள்.

வலைப் பயிற்சி

வலைப் பயிற்சி

ஆனால் தொடரின் போது இந்திய ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு தான் சாதகமாக இருக்கும். இதன் காரணமாக தான் நாங்கள் இம்முறை பயிற்சி ஆட்டத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். அதற்கு பதில் பயிற்சி முகாமில் நாங்கள் பேட்டிங் செய்ய உள்ளோம். காரணம் வலை பயிற்சி போது சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என்று எங்களுக்கு கற்றுக் கொள்ள போதிய நேரம் கிடைக்கும்.

ஸ்மித் நம்பிக்கை

ஸ்மித் நம்பிக்கை

ஆனால் இது பயிற்சி ஆட்டத்தில் ஆடுகளம் சம்பந்தமே இல்லாமல் அமைக்கப்படுவதால் அந்த அனுபவம் கிடைக்காது என்று ஸ்மித் கூறியுள்ளார். நாங்கள் இந்தியா வருவதற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அங்கு பயிற்சி செய்திருக்கிறோம். இதன் மூலம் இம்முறை இந்தியாவில் வெற்றி பெறுவோம் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Thursday, February 2, 2023, 15:26 [IST]
Other articles published on Feb 2, 2023
English summary
Steve smith tells the reason behind why australia said no to the practice
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X