For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தடுமாறும் சன் ரைசர்ஸ்.. பெயர்ஸ்டோவ், விஜய் சங்கர் அவுட்... 48 போட்டிகளில் இல்லாத மோசமான தொடக்கம்

சண்டிகர்: பஞ்சாப்புக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணி மிகுந்த தடுமாற்றத்துடன் முதலில் பேட் செய்து வருகிறது. 48 ஐபிஎல் ஆட்டங்களில் இல்லாத சாதனையை ஹைதராபாத் அணி செய்திருக்கிறது.

ஐபில் தொடரில் 22 வது போட்டியான,பஞ்சாப், ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயோன ஆட்டம் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் ஒன்றிய மைதானத்தில் தொடங்கியது. முதலில டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

டாஸ் வென்ற அஸ்வின் கூறியதாவது:நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். அஜீவன் மற்றும் அஸ்வின் இல்லை. முஜீப் மற்றும் ராஜ்பூட் ஆகியோர் அணியில் விளையாடுகின்றனர் என்றார்.

என்னப்பா தாடி இது? ஜடேஜாவை கலாய்த்த சிஎஸ்கே வீரர்கள்.. இழுத்துப் பார்த்த ரெய்னா.. பாடம் எடுத்த தோனி! என்னப்பா தாடி இது? ஜடேஜாவை கலாய்த்த சிஎஸ்கே வீரர்கள்.. இழுத்துப் பார்த்த ரெய்னா.. பாடம் எடுத்த தோனி!

அதிர்ஷ்டம் இல்லை

அதிர்ஷ்டம் இல்லை

அதனை அடுத்து ஹைதராபாத் கேப்டன் புவனேஸ்வர் குமார் கூறியதாவது: நாங்கள் முதலில் பந்து வீச தயாராகி இருந்தோம். துரதிஷ்ட வசமாக, அந்த வாய்ப்பு கிட்டவில்லை. பனி முக்கிய காரணியாக உள்ளது. இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்றார்.

வார்னர் தடுமாற்றம்

வார்னர் தடுமாற்றம்

இதையடுத்து, ஹைதராபாத் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக வார்னரும், பெயர்ஸ்டோவும் வந்தனர். வழக்கமாக மற்ற அணிகளுடன் ஆட்டத்தை தொடங்கும் போது அதிரடியாக வெளுக்கும் வார்னர் இம்முறை ரன்கள் எடுக்க தடுமாறினார்.

பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவ் அவுட்

பெயர்ஸ்டோவும் தடுமாறியது, அவர் பந்தை எதிர்கொண்ட விதத்திலேயே தெரிந்தது. 6 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 1 ரன் மட்டும் எடுத்து முஜிபுர் ரகுமான் பந்தில் வெளியேறினார்.

நிதானமான விஜய் சங்கர்

நிதானமான விஜய் சங்கர்

ஆரம்பமே ஹைதராபாத் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து வந்த விஜய் சங்கர் வழக்கம் போல நிதானத்தை கையில் வைத்து கொண்டு ஆடினார். பந்துகளை ரன்களாக மாற்றுவதற்கு இருவரும் கடும் சிரத்தை எடுத்துக் கொண்டனர். 26 ரன்கள் எடுத்திருந்த விஜய் சங்கர் அஸ்வின் பந்தில் வீழ்ந்தார்.

குறைந்த ரன்ரேட்

குறைந்த ரன்ரேட்

விக்கெட்டுகள் விழுந்ததால், ரன்ரேட்டும் ரொம்ப குறைவாக இருக்கிறது. இந்த போட்டியின் வழியாக ஹைதராபாத் அணி ஒரு மோசமான சாதனையை செய்திருக்கிறது.

பவர் ப்ளேவில் மோசம்

பவர் ப்ளேவில் மோசம்

கடந்த 48 ஐபிஎல் ஆட்டங்களில் இல்லாத ஒரு சாதனையாக... அந்த அணியானது பவர் ப்ளேயில் குறைந்த ரன்களை எடுத்திருக்கிறது. அதாவது பவர் ப்ளேயில் 27/1 என்ற ஸ்கோர் தான் அந்த அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும். மந்தமான இந்த தொடக்கம் ஹைதராபாத் அணியின் ரன் ரேட்டையும் கடுமையாக பாதித்திருக்கிறது.

Story first published: Monday, April 8, 2019, 21:06 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
Sun risers hydrabad lose opening wickets and struggle to score.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X