For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணிக்கு ஆபத்து.. ப்ளேயிங்11ல் உள்ள பிரச்சினை.. கம்பீர் கடும் எச்சரிக்கை

மெல்பேர்ன்: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டால் பெரும் ஆபத்தாக அமையும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் எச்சரித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை வரும் அக்டோபர் 23ம் தேதி எதிர்கொள்கிறது.

இரு அணிகள் மோதும் இந்த போட்டி மெல்பேர்ன் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலககோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? சேவாக், ஜாகீர் கான், நெஹ்ரா சொன்ன ஆருடம்டி20 உலககோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணி எது? சேவாக், ஜாகீர் கான், நெஹ்ரா சொன்ன ஆருடம்

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கு இந்திய ப்ளேயிங் 11 உறுதி செய்யப்பட்டுவிட்டதாக ரோகித் சர்மா கூறியிருந்தார். வீரர்களுக்கு கடைசி நேரத்தில் கூறுவதை விட, முன்கூட்டியே விளையாடுகிறீர்கள் எனக்கூறிவிட்டால், அவர்கள் அதற்கேற்ப எவ்வித பதற்றமும் இன்றி தயாராவார்கள் எனக்கூறியிருந்தார். அப்படி ரோகித் சர்மா கூறியதன் மூலம் தினேஷ் கார்த்திக் ப்ளேயிங் 11 இருப்பது உறுதியாகியுள்ளது.

 கம்பீர் விளாசல்

கம்பீர் விளாசல்

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்-ஆல் இந்திய அணிக்கு ஆபத்துதான் என முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என்னைப்பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் தான் 5 வீரராக விளையாட வேண்டும். ஹர்திக் பாண்ட்யா 6வது இடத்திலும் அக்‌ஷர் பட்டேல் 7வது இடத்திலும் விளையாட வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் தான் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறார். அது தவறான முடிவு.

 பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

ஒரு வீரர் வெறும் 10 பந்துகளை விளையாடுவதற்காக மட்டும் அணியில் இருக்கக்கூடாது. 5வது அல்லது 6வது வீரராகவும் அணியில் ஒரு வீரர் செயல்பட வேண்டும். ஆனால் தினேஷ் கார்த்திக் அதற்கு ஆர்வம் கூட காட்டவில்லை. அணி நிர்வாகும் அதை தான் விரும்புகிறது. ஆஸ்திரேலியா போன்ற களங்களில் வெகு சீக்கிரம் விக்கெட்கள் இழந்தால் அக்‌ஷர் பட்டேலை தான் நீங்கள் டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் ஹர்திக் பாண்ட்யாவை பதற்றத்தில் களமிறக்க மாட்டீர்கள். இதனால் தான் பண்ட் வேண்டும் எனக்கூறுகிறேன் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஐபிஎல் தொடரில் இருந்து தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார். அதுவும் ஆஸ்திரேலிய களத்தில் தினேஷ் கார்த்திக் இதற்கு முன்னர் மிகச்சிறப்பான ரெக்கார்டை வைத்துள்ளார். மறுபுறம் பண்ட் டி20ல் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இதன் காரணமாக தான் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, October 21, 2022, 22:17 [IST]
Other articles published on Oct 21, 2022
English summary
Gautam gambhir thinks adding Dinesh karthik in playing 11 is danger for Team India in Pakistan clash
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X