For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணி பேட்டிங்.. டாஸில் தனி ரூட் போட்ட ரோகித் சர்மா.. வெற்றியை தாண்டி இப்படி ஒரு காரணமா??

சிட்னி: நெதர்லாந்து அணியுடனான போட்டியில் ரோகித் சர்மா ரன்ரேட்டிற்காக பலே முடிவை எடுத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அஸ்வினின் இடத்திற்கே சிக்கல்.. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் அதிரடி மாற்றம்.. யாருக்கு வாய்ப்பு?? அஸ்வினின் இடத்திற்கே சிக்கல்.. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் அதிரடி மாற்றம்.. யாருக்கு வாய்ப்பு??

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் அட்டகாசமாக விளையாடிய இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் களமிறங்குகிறது. சிட்னி மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சாஹல் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவித மாற்றமும் இன்றி இந்திய அணி களமிறங்குகிறது.

 ரோகித்தின் திட்டம்

ரோகித்தின் திட்டம்

இந்நிலையில் டாஸில் பேட்டிங் தேர்வு செய்ததற்கு பின்னால் பெரும் திட்டத்தை ரோகித் சர்மா போட்டுள்ளார். பாகிஸ்தானுடன் கடைசி பந்தில் தான் வென்றார்கள் என்பதால் இந்தியாவின் ரன்ரேட் 0.050 என உள்ளது. கடந்தாண்டு ரன்ரேட் குறைவாக இருந்ததால் தான் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. எனவே இந்த போட்டியின் மூலம் ரன்ரேட்டை உச்சிக்கு கொண்டு செல்ல ரோகித் திட்டமிட்டுள்ளார். இது நிறைவேற அதிகளவில் வாய்ப்புள்ளது.

உதாரணம் இதோ

உதாரணம் இதோ

ஏனென்றால் இந்திய போட்டிக்கு முன்னாள் இதே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 205 ரன்களை விளாசியது. பின்னர் ஆடிய வங்கதேசம் 101 ரன்களுக்குள் சுருண்டது. எனவே 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக ரன்ரேட்டை குவித்தது. அதே திட்டத்தை பின்பற்றி தான் ரோகித்தும் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

Story first published: Thursday, October 27, 2022, 13:01 [IST]
Other articles published on Oct 27, 2022
English summary
Team India won the Toss against netherland match and choose to bat for Increase the runrate in t20 world cup 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X