சென்னை விமான நிலைய தரையில் படுத்த டோணி! வைரலாகும் போட்டோ

Posted By:

சென்னை: டோணியை ஏன் கேப்டன் கூல் என்று அழைப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை சென்னையில் வைத்து நிரூபித்துள்ளார் அவர்.

களமாக இருக்கட்டும், பொதுவெளியாக இருக்கட்டும், தான், எப்போதுமே மிஸ்டர் கூல் ஹீரோ என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் அணியை பாண்ட்யாவுடன் இணைந்து சரிவில் இருந்து மீட்ட டோணி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இதையடுத்து செப்டம்பர் 21ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

படுத்தேவிட்டாரய்யா

படுத்தேவிட்டாரய்யா

மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க டோணி அப்படியே கீழே படுத்துவிட்டார். இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றியால் இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர். அப்போது அவர்களை கூல் செய்ய மைதானத்திலேயே குப்புற படுத்தவர்தான் டோணி.

கூல் டோணி

கூலிங்கிளாசை அணிந்தபடி டோணி படுத்திருக்க, அருகே சக இளம் வீரர்கள் அமர்ந்துள்ள புகைப்படம் பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய வீரர்கள் இப்படித்தான் ரிலாக்ஸ் செய்கிறார்கள் என்று சொல்கிறது படத்துக்கான கேப்ஷன்.

எளிமை

எளிமை

டோணியின் வெற்றி ரகசியமே இப்படி படுத்துவிடுவதுதான் என்று நெட்டிசன்கள் பேசிக்கொள்கிறார்கள். இலங்கையில் அவர் தரையில் படுத்ததையும் ஒப்பிட்டு, டோணி எளிமையை விரும்புவர், பணம் எவ்வளவு இருந்தாலும், கர்வம் இல்லாதவர் என்று புகழ்கிறார்கள் நெட்டிசன்கள்.

பாட்ஷா

தோனி ஹேட்டர்ஸ் நவ் என்று பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரம் கையில் முத்தம் கொடுத்து அவரிடம் சேர்ந்துகொள்ளும் காட்சியை மீம் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

Story first published: Monday, September 18, 2017, 16:07 [IST]
Other articles published on Sep 18, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற