For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுமார் மூஞ்சி பீல்டிங்.. ரொம்ப சுமார் மூஞ்சி பவுலிங்.. இதுதாங்க தோத்ததுககு மெயின் காரணமே...!

சென்னை: மோசமான பவுலிங், ஓட்டையான பீல்டிங், மந்தமான பேட்டிங், சுதாரிப்பில்லாத ஆட்டம்.. என யுவராஜ் சிங்கையும் தாண்டி நிறையா காரணம் உள்ளது, இலங்கையிடம் இறுதிப் போட்டியில் நாம் தோற்றுப் போனதற்கு.

யுவராஜ் சிங்கை மட்டும் காரணம் காட்டி, கையை நீட்டி தப்பித்துக் கொள்ள நினைப்பதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அவரும் ஒரு முக்கியக் காரணமே தவிர, அவர் மட்டுமே காரணம் என்று கூறி விடவும் முடியாது.

அஸ்வின் கை கொடுப்பார், கோஹ்லி காப்பாத்துவார் என்று மட்டும் நம்பி களம் இறங்கியது போல இருக்கிறது இந்தியாவின் ஆட்டத்தைப் பார்க்கும்போது. இறுதிப் போட்டி, அதுவும் உலகக் கோப்பைப் போட்டி. .எப்படி திட்டம் போட்டு இலங்கையை வெளுத்திருகக வேண்டும்.. அதைச் செய்யத் தவறியதே முக்கியக் காரணம்.

சுதாரிப்பில்லாத பேட்டிங்

சுதாரிப்பில்லாத பேட்டிங்

ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் பேட்டிங்கில் சுதாரிப்பு இல்லை. இலங்கையின் பந்து வீச்சைத் தகர்த்து சரவெடியாக வெடிக்கத் தவறி விட்டனர்.

ரஹானே ஒரு முக்கிய பெயிலியர்

ரஹானே ஒரு முக்கிய பெயிலியர்

அஜிங்கியா ரஹானே நமது பேட்டிங்கில் ஒரு முக்கிய பெயிலியர். அவர் சற்று சுதாரித்து ஆடியிருக்கலாம். ஆனால அவரைக் குறை சொல்ல முடியாது.

முடக்கிப் போடப்பட்ட ரோஹித்

முடக்கிப் போடப்பட்ட ரோஹித்

ரோஹித் சர்மா நன்றாகத்தான் ஆடினார். ஆனால் அவரை இலங்கை வீரர்கள் அழகாக அவுட் செய்து விட்டனர்.

தனியாகப் போராடிய கோஹ்லி

தனியாகப் போராடிய கோஹ்லி

மறுபக்கம் கோஹ்லி தனியாக ஒரு பெரும் போராட்டமே நடத்தினார். ஆனால் மிக அழகாக ஆடினார்.

யுவராஜ் சற்று ஆடியிருக்கலாம்

யுவராஜ் சற்று ஆடியிருக்கலாம்

யுவராஜ் சிங் பெரும் ஏமாற்றம். அவர் மட்டும் சற்று சுதாரித்து அடித்து ஆடியிருந்தால் நிலைமையே மாறியிருக்கும்.

கடைசி நேரத்தில் பெரும் சொதப்பல்

கடைசி நேரத்தில் பெரும் சொதப்பல்

கோஹ்லியின் ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் கடைசி ஓவர்களில் சொதப்பி விட்டனர் நம்மவர்கள். ஒரு பவுண்டரி அடிக்கவே தடுமாறிப் போயினர்.

கடைசி ஓவரில் மகா சொதப்பல்

கடைசி ஓவரில் மகா சொதப்பல்

அதை விட மோசம் கடைசி ஓவரில் நமது வீரர்கள் ஆடிய விதம். ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. மலிங்காவின் பந்து வீசசும் சிறப்பாக இருந்ததால், சுத்தமாக நாம் முடங்கிப் போய் விட்டோம். கடைசிப் பந்தில் கோஹ்லி ரன் அவுட் வேறு ஆனது இன்னொரு சோகம்.

ஓட்டை பீல்டிங்

ஓட்டை பீல்டிங்

அடுத்து நாம் பீல்டிங் செய்தபோது பல நல்ல கேட்ச்சுக்களைத் தவற விட்டோம். டோணியே சில அருமையான கேட்ச்சுக்களை கோட்டை விட்டார். ரஹானே ஒரு அருமையான கேட்ச்சை, கஷ்டமானதுதான், இருந்தாலும் பிடிக்க முயன்று, பிடித்து நழுவ விட்டார்.

பந்து வீச்சு மோசம்

பந்து வீச்சு மோசம்

அஸ்வினை மட்டுமே நாம் நிறைய நம்பியிருந்தோம். ஆனால் அஸ்வின் பந்தை நேற்று நன்றாகப் பதம் பார்த்து விட்டனர். சொல்லிச் சொல்லி அடித்தனர். நிறைய பவுண்டரிகளை எடுகக் நாம் அனுமதித்து விட்டோம். அது ஒரு முக்கிய தவறு.

ரன் ரேட்டைக் குறைக்கவே முயற்சிக்கவில்லை

ரன் ரேட்டைக் குறைக்கவே முயற்சிக்கவில்லை

எப்போதுமே எதிரணி சேஸ் செய்யும்போது ரன் ரேட் எகிறி விடாமல் தடுக்க வேண்டியது முக்கியம். ஆனால் அதை நாம் ஏனோ நேற்று செய்யவே இல்லை. அவர்களை அடித்து ஆட அனுமதித்து விட்டோம். அதுதான் மிகப் பெரிய தவறு. அவர்களது அதிரடியைக் குறைத்து, ரன் எடுக்க விடாமல் தடுத்து, நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கலாம். அதைச் செய்யவில்லை.

மொத்தத்தால் எல்லாமே போச்சு.. இனி என்ன சொல்லி என்ன புண்ணியம்...!

Story first published: Monday, April 7, 2014, 12:48 [IST]
Other articles published on Apr 7, 2014
English summary
There are many reasons behind our failure in the final against Sri Lanka in WC T20 in Mirpur.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X