For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹன்சி குரோனியே மேட்ச் பிக்ஸிங்.. ஞாபகம் இருக்கா? அதன் முக்கிய குற்றவாளி இந்தியா வரப் போகிறார்!!

லண்டன் : முன்னாள் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஹன்சி குரோனியே மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் புக்கியாக செயல்பட்ட இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ் சாவ்லா இங்கிலாந்தில் சிறையில் இருக்கிறார்.

அவரை இந்தியாவிடம் விசாரனைக்கு ஒப்படைக்கலாம் என இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் உலகை உலுக்கிய சம்பவம்

கிரிக்கெட் உலகை உலுக்கிய சம்பவம்

கடந்த 2000மாவது ஆண்டில் கிரிக்கெட் உலகை உலுக்கிய மேட்ச் பிக்ஸிங் சம்பவம் இது தான். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் ஹன்சி குரோனியே மீது மேட்ச் பிக்ஸிங் செய்ததாக புகார் எழுந்தது.

குற்றத்தை ஒப்புக் கொண்டார்

குற்றத்தை ஒப்புக் கொண்டார்

அதை பலரும் நம்ப மறுத்த நிலையில், அவரே முன்வந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்ய தான் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். அது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சஞ்சீவ் சாவ்லா கைது

சஞ்சீவ் சாவ்லா கைது

அதில் சம்பந்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த புக்கி சஞ்சீவ் சாவ்லா இங்கிலாந்தில் வசித்து வந்தார். அவரை 2016இல் இங்கிலாந்து அரசு கைது செய்தது. அவர் 1996 முதல் அங்கே தான் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் வரலாம்

விரைவில் வரலாம்

அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டி கோரிக்கை விடுத்தது இந்திய அரசு. இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவால், விரைவில் அவர் இந்தியா அழைத்து வரப்படுவார் என தெரிகிறது.

உண்மை வெளி வருமா?

உண்மை வெளி வருமா?

ஹன்சி குரோனியே கடந்த 2002இல் விமான விபத்தில் மரணமடைந்தார். இந்நிலையில், சுமார் 16 வருடங்கள் கழித்து இந்தியா இந்த மேட்ச் பிக்ஸிங் விவகாரம் குறித்து விசாரணை செய்ய உள்ளது. இப்பயாவது என்ன நடந்ததுனு சொல்வாங்களா?

Story first published: Monday, January 7, 2019, 17:05 [IST]
Other articles published on Jan 7, 2019
English summary
UK court clears the extradition of Cricket Bookie Sanjeev Chawla, who involved in Hansie Cronje Match Fixing Scandal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X